Home
Mobile

Xiaomi எம்ஐ 11எக்ஸ் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

சியோமி நிறுவனத்தின் Xiaomi Mi 11X Pro 5G ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

விலைகுறைப்பு

விலைகுறைப்பு

இந்நிலையில் சியோமி எம்ஐ 11எக்ஸ் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.40,000-ஆக இருந்தது. தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.26,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 கூடுதலாக ரூ.5,000 வரை தள்ளபடி

கூடுதலாக ரூ.5,000 வரை தள்ளபடி

இதுதவிர பழைய ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்தால் கூடுதலாக ரூ.5,000 வரை தள்ளுபடியை பெறமுடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் காஸ்மிக் பிளாக், ஃப்ரோஸ்டி ஒயிட் மற்றும் செலஸ்டியல் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

AMOLED டிஸ்பிளே

AMOLED டிஸ்பிளே

சியோமி எம்ஐ 11எக்ஸ் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இ4 AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும்சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சியோமி ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் சிப்செட்

ஸ்னாப்டிராகன் சிப்செட்

சியோமி எம்ஐ 11எக்ஸ் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

பின்பு இதில் Adreno 660 GPU ஆதரவு மற்றும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதள வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்

8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்

இந்த அட்டகாசமான சியோமி எம்ஐ 11எக்ஸ் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 108எம்பி Samsung HM2 sensor + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட்போன் மாடல்.

டால்பி அட்மோஸ் ஆதரவு

டால்பி அட்மோஸ் ஆதரவு

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் வசதி மற்றும் டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் உள்ளன. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 33 வாட்ஸ் பாஸட் சார்ஜிங்

33 வாட்ஸ் பாஸட் சார்ஜிங்

சியோமி எம்ஐ 11எக்ஸ் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 4520 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 33 வாட்ஸ் பாஸட் சார்ஜிங் ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான சியோமி ஸ்மார்ட்போன்.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சியோமி எம்ஐ 11எக்ஸ் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 11X Pro 5G Price Slashed in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X