சஸ்பென்ஸ உடைச்சிட்டாங்களே: எம்ஐ 11 சீரிஸ் அம்சங்கள் லீக்- கூடுதலா ஒரு குட்டி டிஸ்ப்ளே வேற!
சியோமி எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனானது ரெட்மி கே40 ப்ரோ+ சாதனத்தின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என வதந்திகள் தெரிவிக்கிறது. அதேபோல் எம்ஐ 11 எக்ஸ் ரெட்மி கே40 சாதனத்தின் மறுபெயரிட்ட பதிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. சியோமி ஏப்ரல் 23 ஆம் தேதி இந்தியாவில் எம்ஐ 11 அல்ட்ரா சாதனத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. அதேதினத்தில் இந்தியாவில் எம்ஐ 11 எக்ஸ் மற்றும் எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ சாதனத்தையும் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஸ்மார்ட்போன்களின் ரேம் மற்றும் சேமிப்பக விருப்பங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

எம்ஐ 11 அல்ட்ரா மாடல்
அதேபோல் டிப்ஸ்டர் முகுல்ஷர்மா வெளியிட்ட தகவலின்படி, எம்ஐ 11 அல்ட்ரா மாடல் ஒரே வேரியண்டில் வரும் எனவும் இது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்சேமிப்புடன் வரும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் எம்ஐ 11 எக்ஸ் மற்றும் எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ சாதனமானது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு மற்றும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்சேமிப்புடன் வரும் எனவும் கூறப்படுகிறது.

எம்ஐ 11எக்ஸ் ப்ரோ மற்றும் எம்ஐ 11எக்ஸ்
அதேபோல் எம்ஐ 11எக்ஸ் ப்ரோ மற்றும் எம்ஐ 11எக்ஸ் ஸ்மார்ட்போனானது டெபயன் ராய் என்பவர் @Gadgetsdataவில் கசியவிட்டுள்ளார். இதுகுறித்த டுவிட்டின்படி எம்ஐ11 எக்ஸ் 8ஜிபி ரேம், 128ஜிபி மற்றும் 8ஜிபி ரேம், 256ஜிபி வேரியண்ட்களின் விலை தெரியவந்துள்ளது. இதில் 8 ஜிபி+128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.29,990 எனவும் 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் விலை ரூ.31,990 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மறுபுறம் எம்ஐ 11எக்ஸ் ப்ரோ 8ஜிபி ரேம், 128ஜிபி வேரியண்ட் விலை ரூ.36,990 எனவும் 8ஜிபி ரேம், 256ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.38,990 எனவும் இருக்கும் என கூறப்படுகிறது.

எம்ஐ 11 அல்ட்ரா விலை
எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை குறித்து பார்க்கையில் 8ஜிபி ரேம், 256 ஜிபி உள்சேமிப்பு விலை இந்திய மதிப்புப்படி ரூ.66,400 ஆகவும் 12ஜிபி ரேம், 256ஜிபி உள்சேமிப்பு விலை இந்திய மதிப்புப்பிட ரூ.72,000 ஆகவும் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்சேமிப்பு விலை இந்திய மதிப்புப்படி ரூ.77,500 ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

எம்ஐ11 அல்ட்ரா விவரக்குறிப்புகள்
எம்ஐ11 அல்ட்ரா விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், 6.81 இன்ச் டபிள்யூக்யூஎச்டி ப்ளஸ் இ4 அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வரும் எனவும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் உடன் 240 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதம் கொண்டிருக்கிறது. அதேபோல் டால்பி விஷன் ஆதரவு மற்றும் எச்டிஆர் 10+ ஆதரவையும் கொண்டிருக்கிறது. அதோடு இந்த புதிய ஸ்மார்ட்போனானது புதிய கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் வரும் எனவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன் 1.1 இன்ச் அமோலெட் இரண்டாம் நிலை டச் மாதிரி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

கூடுதலாக இருக்கும் குட்டி டிஸ்ப்ளே
இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு வரும் எனவும் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வரும் எனவும் வயர்லெஸ் சார்ஜிங் அம்சமும் இதில் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதில் மூன்று பின்புற கேமரா அமைப்பை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 48 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 48 மெகாபிக்சல் சோனி அல்ட்ரா-வைட் ஆங்கிள் உடன் வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 20 மெகாபிக்சல் முன்புற செல்பி கேமரா துளை பஞ்ச் கட்அவுட் வசதி இருக்கிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி இதில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications