Home
Mobile

இன்று விற்பனைக்கு வரும் Mi 11 Ultra ஸ்மார்ட்போன்.!

மிகவும் எதிர்பார்த்த மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் limited quantity sale இன்று தொடங்குகிறது. அதாவது இந்த சாதனம் ஜூலை 7 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் வாங்க கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் குறைந்த அளவிலேயே வாங்க கிடைக்கும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

த கிஃப்ட் கார்டை மி 11

இந்த ஸ்மார்டபோனை வாங்க விருப்பம் உள்ளவர்கள் மி.காம் வலைத்தளத்தில் தங்கள் Mi ஐடியுடன் பதிவு செய்ய வேண்டும் அல்லது லாக் இன்செய்து ரூ.1,999 மதிப்புள்ள அல்ட்ரா கிஃப்ட் கார்டை வாங்க வேண்டும். குறிப்பாக இது விற்பனைக்கு உத்தரவாதமான அணுகலை வழங்கும் என்றும், இந்த கிஃப்ட் கார்டை மி 11 அல்ட்ரா வாங்கும் நேரத்தில் மீட்டெடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடல் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது தான் விற்பனைக்கு வருகிறது. மேலும் குறிப்பிட்ட விற்பனை நாட்களில் அல்ட்ரா கிஃப்ட் கார்டை வாங்கியவர்களுக்கு அல்ட்ரா எஃப் குறியீடு கிடைக்கும், அதை limited quantity sale-ஐ அணுக பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

 மி 11 அல்ட்ரா

இந்த மி 11 அல்ட்ரா சாதனத்திற்கு எஸ்பிஐ கிரெடிட் சலுகையும் உள்ளது. அதன்படி இந்த சலுகையின் கீழ் மி 11 அல்ட்ரா மீது ரூ.5,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். குறிப்பாக 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை ரூ.69,990-ஆக
உள்ளது. மேலும் இப்போது இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடல் 6.81-இன்ச் WQHD+ டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இது1,440x3,200 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு என அனைத்து சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது. மி 11 அல்ட்ரா சாதனத்தின் பின்புறம் 1.1-இன்ச் டிஸ்பிளே மற்றும் 126x294 பிக்சல் தீர்மானம் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி சிப்செட்

ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி சிப்செட்

மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளது. எனவே கேமிங் உட்பட பல்வேறு ஆப் வசதிகளை வேகமாக இயக்க முடியும். பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதுஇந்த புதிய சாதனம்.

48எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்

48எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்

சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 48எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 48எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர செல்பீகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் 20எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன்.

67 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

67 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு அருமையான சென்சார் வசதிகளை கொண்டுள்ளது இந்த சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன்.

வைஃபை 6, புளூடூத் வி5.2,

5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை 6, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், நாவிக் ஆதரவு, என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் கருப்பு, வெள்ளை நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 11 Ultra Sale Starts Today in India: Price, Offers and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X