Home
Mobile

பின்னாடி ஒரு குட்டி டிஸ்ப்ளே வேற இருக்கு: அறிமுகமான எம்ஐ 11 அல்ட்ரா, எம்ஐ 11எக்ஸ், எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ!

சியோமி எம்ஐ 11 அல்ட்ரா, எம்ஐ 11எக்ஸ், எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்களானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமரா அமைப்புகளுடன் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

Xiaomi Mi 11 Ultra, Mi 11X, Mi 11X Pro ஸ்மார்ட்போன்

Xiaomi Mi 11 Ultra, Mi 11X, Mi 11X Pro ஸ்மார்ட்போன்

Xiaomi Mi 11 Ultra, Mi 11X, Mi 11X Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சியோமி எம்ஐ 11 அல்ட்ரா சாதனத்தின் பின்புறத்தில் 1.1 இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது. இந்த டிஸ்ப்ளேவை பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தலாம்.

எல்லாமே உயர்ரக அம்சங்கள்

எல்லாமே உயர்ரக அம்சங்கள்

சியோமி எம்ஐ 11 அல்ட்ரா, எம்ஐ 11 எக்ஸ் மற்றும் எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் யூடியூப் சேனலில் நடைபெற்ற மெய்நிகர் நிகழ்வு மூலம் அறிமுகம் செய்யப்பட்டன. எம்ஐ அல்ட்ரா என்பது எம்ஐ 11 தொடரில் இந்தியாவுக்கு வந்த முதல் சாதனமாகும். இந்த சாதனத்தின் பெயர் குறிப்பிடுவது போல் இதில் உள்ள அனைத்து அம்சங்களும் உயர்ரகமாக இருக்கிறது.

சியோமி எம்ஐ 11 சீரிஸ் விலை விவரங்கள்

சியோமி எம்ஐ 11 சீரிஸ் விலை விவரங்கள்

சியோமி எம்ஐ 11 அல்ட்ரா, எம்ஐ 11 எக்ஸ் மற்றும் எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ இந்தியாவில் கிடைக்கும் விலை மற்றும் தன்மை குறித்து பார்க்கையில், சியோமி எம்ஐ 11 அல்ட்ரா 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.69,990 என இருக்கிறது. இது கருப்பு மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. எம்ஐ 11 எக்ஸ் விலை குறித்து பார்க்கையில் இதன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மாடல் விலை ரூ.29,999 எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மாடல் விலை ரூ.31,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ விலை குறித்து பார்க்கையில், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.39,990 எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.41,999 எனவும் இருக்கிறது. எம்ஐ 11 எக்ஸ் மற்றும் எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இரண்டும் செலஸ்டியர் சில்வர், காஸ்மிக் பிளாக் மற்றும் ஃப்ரோஸ்டி வைட் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. மேலும் எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஏப்ரல் 24 ஆம் தேதி முதலும் எம்ஐ 11எக்ஸ் ஏப்ரல் 27 ஆம் தேதி முதலும் விற்பனைக்கு கிடைக்கும்.

சியோமி எம்ஐ 11 அல்ட்ரா சிறப்பம்சங்கள்

சியோமி எம்ஐ 11 அல்ட்ரா சிறப்பம்சங்கள்

சியோமி எம்ஐ 11 அல்ட்ரா சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது ஆண்ட்ராய்டு 11 ஆதரவு, 6.81 இன்ச் டபிள்யூக்யூஎச்டி ப்ளஸ் இ4 அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் கொண்டுள்ளது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸால் பாதுகாப்பு ஆதரவும், பின்புறத்தில் இரண்டாம் நிலை டிஸ்ப்ளேவாக 1.1 இன்ச் அளவுடன் இருக்கிறது. எம்ஐ 11 அல்ட்ரா குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி அட்ரினோ 660 ஜிபீயுடன் இயக்கப்படுகிறது.

50 மெகாபிக்சல் முதன்மை கேமரா

50 மெகாபிக்சல் முதன்மை கேமரா

50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 48 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 120 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் உடன் வருகிறது. இதன் முன்பக்கத்தில் திரையின் மேல் இடதுமூலையில் 20 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் இருக்கிறது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி, 67 வாட்ஸ் வயர் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு இதில் இருக்கிறது.

சியோமி எம்ஐ 11 எக்ஸ், எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ விவரக்குறிப்புகள்

சியோமி எம்ஐ 11 எக்ஸ், எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ விவரக்குறிப்புகள்

சியோமி எம்ஐ 11 எக்ஸ், எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இதில் சில முக்கிய வேறுபாடுகளுடன் ஒரே அம்சங்களை கொண்டிருக்கின்றன. இரண்டு ஸ்மார்ட்போன்களும் 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் இ4 அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், எச்டிஆர் 10+ ஆதரவுடன் வருகிறது. எம்ஐ 11 எக்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி அட்ரினோ 650 ஜிபீயு உடன் இயக்கப்படுகிறது. எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி அட்ரினோ 660 ஜிபூயூ உடன் இயக்கப்படுகிறது.

எம்ஐ 11 எக்ஸ் கேமரா அம்சம்

எம்ஐ 11 எக்ஸ் கேமரா அம்சம்

எம்ஐ 11 எக்ஸ் கேமரா அம்சத்தை பொறுத்தவரை இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 5 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் வசதியோடு வருகிறது. எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா அம்சத்தோடு இருக்கிறது பிற கேமராக்கள் ஒத்ததாக இருக்கிறது. அதேபோல் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 20 மெகாபிக்சல் முன்புற செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்

இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இருக்கிறது. அதேபோல் எம்ஐ 11 எக்ஸ், எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் 4520 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது.

File Images

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 11 Ultra, Mi 11x, Mi 11X Pro Launched in India With Secondary Display, 120 Hz Refreshing Rate Display
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X