Home
Mobile

இரண்டு டிஸ்பிளே கொண்ட சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?

சியோமி நிறுவனம் புதிய சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் கேமரா மற்றும் மென்பொருள் அமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். அதேசமயம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு போட்டியாக இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

அமேசான் மற்றும் மி.காம் வலைத்தளங்களில் விற்பனைக்கு வரும்

அமேசான் மற்றும் மி.காம் வலைத்தளங்களில் விற்பனைக்கு வரும்

சியோமி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி விரைவில் இந்த சாதனம் அமேசான் மற்றும் மி.காம் வலைத்தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சியோமி மி 11 ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக இருந்தாலும் விலைக்கு தகுந்த அனைத்து சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது. இப்போது சியோமி மி 11 ஸ்மாரட்போன் பற்றிய முழு விவரங்களையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.81-இன்ச் WQHD+ டிஸ்பிளே

6.81-இன்ச் WQHD+ டிஸ்பிளே

சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடல் 6.81-இன்ச் WQHD+ டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இது1,440x3,200 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 480 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1700 nits பிரைட்நஸ் வசதி, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு என அனைத்து சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் பின்புறம் 1.1-இன்ச் டிஸ்பிளே மற்றும் 126x294 பிக்சல் தீர்மானம் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற ஸ்மார்போன்களை விட தனித்துவமான டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி சிப்செட்

ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி சிப்செட்

இந்த புதிய ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி சிப்செட் வசதியுடன் அட்ரினோ 660 ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே கேமிங் உட்பட பல்வேறு ஆப் வசதிகளை வேகமாக இயக்க முடியும். பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

 50எம்பி பிரைமரி சென்சார்

50எம்பி பிரைமரி சென்சார்

இந்த சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 48எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 48எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த பின்புற கேமராக்கள் 8கே வீடியோ (24fps) பதிவு செய்யும் ஆதரவு மற்றும் 4கே வீடியோ(60 & 30fps) பதிவு செய்யும் ஆதரவுகளை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர செல்பீகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் 20எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்தஅட்டகாசமான சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் பல்வேறு அருமையான சென்சார் வசதிகளை கொண்டுள்ளது இந்த சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன்.

டூயல்-பேண்ட் வைஃபை 6, புளூடூத் வி5.2,

5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை 6, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், நாவிக் ஆதரவு, என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் கருப்பு, வெள்ளை நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

56ஜிபி மெமரி கொண்ட

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை ரூ.69,990-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 11 Ultra Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X