கொஞ்சம் வெயிட் பண்ணுங்க: ஜூலை ஆரம்பத்தில் இந்தியாவில் விற்பனை- 12 ஜிபி ரேம் உடன் எம்ஐ 11 அல்ட்ரா!

|

இந்தியாவில் எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிக்கை ஒரு நற்செய்தியாக இருக்கும். 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்தியாவில் சியோமியின் முதன்மை ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்ஐ ஹோம்ஸ் வாடிக்கையாளரின் ஆர்வத்தை பதிவு செய்ய தொடங்கியுள்ளது. ஆர்வம் ஜூலை மாத ஆரம்பத்தில் பூர்த்தி செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு வெளியிடவில்லை

அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு வெளியிடவில்லை

இருப்பினும் சியோமி தரப்பில் அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு வெளியிடவில்லை. செவ்வாய்கிழமை நாட்டில் நிலைமை பொறுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை மாத தொடக்கம் முதல் எம்ஐ 11 அல்ட்ரா கிடைப்பதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எம்ஐ ஹோம் ஸ்டோர்ஸ்-ல் இந்த தொலைபேசியை பதிவு செய்யலாம்.

ஆன்லைன் தளத்திலும் விற்பனை

ஆன்லைன் தளத்திலும் விற்பனை

சாதனம் கையிருப்பு இருக்கும்போது சில்லறை விற்பனையாளர்களிடம் ஆர்வமுள்ள பயனர்கள் மீதமுள்ள தொகையை செலுத்தி சாதனத்தை பெறுவார்கள். அதேபோல் எம்ஐ 11 அல்ட்ரா ஆன்லைன் தளத்திலும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சியோமி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

12 ஜிபி ரேம் என்ற ஒரே வேரியண்ட்

12 ஜிபி ரேம் என்ற ஒரே வேரியண்ட்

சியோமி எம்ஐ 11 அல்ட்ரா சாதனம் 12 ஜிபி ரேம் என்ற ஒரே வேரியண்டில் ஏப்ரல் 23 ஆம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ.69,999 ஆக உள்ளது. நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் தன்மை குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. விற்பனை தேதிக்கு தாமதம் தற்போதைய சூழ்நிலைகள் காரணம் என சியோமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சியோமி வெளியிட்ட அறிக்கை

சியோமி வெளியிட்ட அறிக்கை

இதற்கு முன்பாக எம்ஐ 11 அல்ட்ரா விற்பனை தாமதம் குறித்து சியோமி வெளியிட்ட அறிக்கையில், " உங்களில் பலர் இந்த அல்ட்ரா ப்ரீமியம் முதன்மை ரக ஸ்மார்ட்போனை வாங்க ஆர்வமாக இருக்கிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்துக் கொள்கிறோம். இருப்பினும் எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகள் காரணமாக எம்ஐ 11 அல்ட்ரா ஏற்றுமதி தாமதம் ஏற்படும் என தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் இந்திய சந்தையில் கொண்டு வர கடுமையாக முயற்சித்து வருவதாகவும்., தற்போதைய நிலைமை விரைவில் மேம்பட்டவுடன் சரியான விற்பனை தேதி மட்டுமே வழங்க முடியும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பூட்டுதல் காரணமாக சியோமி வழங்கல் மற்றும் உற்பத்தியில் சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும் என குறிப்பிடப்பட்டது.

சியோமி எம்ஐ 11 அல்ட்ரா சிறப்பம்சங்கள்

சியோமி எம்ஐ 11 அல்ட்ரா சிறப்பம்சங்கள்

சியோமி எம்ஐ 11 அல்ட்ரா சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது ஆண்ட்ராய்டு 11 ஆதரவு, 6.81 இன்ச் டபிள்யூக்யூஎச்டி ப்ளஸ் இ4 அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் கொண்டுள்ளது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸால் பாதுகாப்பு ஆதரவும், பின்புறத்தில் இரண்டாம் நிலை டிஸ்ப்ளேவாக 1.1 இன்ச் அளவுடன் இருக்கிறது. எம்ஐ 11 அல்ட்ரா குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி அட்ரினோ 660 ஜிபீயுடன் இயக்கப்படுகிறது.

50 மெகாபிக்சல் முதன்மை கேமரா

50 மெகாபிக்சல் முதன்மை கேமரா

50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 48 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 120 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் உடன் வருகிறது. இதன் முன்பக்கத்தில் திரையின் மேல் இடதுமூலையில் 20 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் இருக்கிறது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி, 67 வாட்ஸ் வயர் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு இதில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்திற்கு கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது.

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு

இந்த ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.69,999 ஆக இருக்கிறது. அதேபோல் இது காஸ்மிக் பிளாக் மற்றும் காஸ்மிக் வைட் வண்ண விருப்பங்களில் வருகிறது. சியோமி எம்ஐ 11 அல்ட்ரா 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.69,990 என இருக்கிறது. இது கருப்பு மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Xiaomi MI 11 Ultra Expected to Sale Start in India on Early July

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X