சியோமி எம்ஐ 11 ப்ரோ இப்படிதான் இருக்குமா?- வெளியான அம்சங்கள் இதோ!
சியோமி நிறுவனம் எம்ஐ 11 தொடர் ஸ்மார்ட்போன்களை மார்ச் 29 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பிராண்ட் எம்ஐ11 ப்ரோ, எம்ஐ 11 அல்ட்ரா, எம்ஐ 11 லைட் ஆகிய ஸ்மார்ட்போன்கள் இருக்கும் சமீபத்திய தகவல்கள் தெரிவித்தன.

ப்ரோ வேரியண்ட் ஸ்மார்ட்போன்
ப்ரோ வேரியண்டின் இறுதி கட்ட ஆய்வை உறுதிப்படுத்தும் விதமான பெஞ்ச்மார்க் இணையதளத்தில் காணப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீண்டும் தொடங்குவதற்கு முன்பு எம்ஐ11 ப்ரோவின் அம்சங்கள் கீக்பெஞ்சில் காணப்பட்டுள்ளது. பெஞ்ச்மார்க் இணையதளத்தில் M20102K1AC உடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் குவால்காம் செயலி 8 கோர்கள், 2.84 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்துடன் காணப்படுவதாக தெரிவித்துள்ளது. ஸ்னாப்டிராகன் 88 செயலி உடன் இந்த சாதனம் இருக்கும் என கூறப்படுகிறது.

சியோமி எம்ஐ 11 ப்ரோ
கீக்பெஞ்ச் பட்டியலின்படி சியோமி எம்ஐ 11 ப்ரோ ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் விருப்பத்தோடு வரும் எனவும் 8ஜிபி ரேம் மாடலைக் கொண்டிருக்கும் எனவும் நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த சிப்செட் ஆனது அட்ரினோ 660ஜிபியூ உடன் இணைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கீக்பெஞ்ச் சிங்கிள் கோர் சோதனையில் எம்ஐ 11 ப்ரோ சாதனம் 4,233 புள்ளிகளையும் மல்டி கோர் சோதனையில் 12,567 புள்ளிகளையும் பெற்றிருக்கிறது. எம்ஐ11 ப்ரோ வளைந்த விளிம்புகளை கொண்டிருக்கும் எனவும் இந்த ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே அளவை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

அதேபோல் பின்புற பேனலில் இரண்டாம் நிலை காட்சி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் அம்சங்கள் மற்றும் தகவல்கள் கசிவின் மூலம் தெரிவிக்கப்படுகிறது. அதோடு இந்த ஸ்மார்ட்போன் 67 வாட்ஸ் வயர்லெஸ் மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் வரும் என கூறப்படுகிறது. எம்ஐ 11 தொடர் சியோமியின் சமீபத்திய முதன்மை தொடர் ஸ்மார்ட்போனாகும். இந்த தொடர் ஸ்மார்ட்போன்கள் முன்னதாகவே சீன சந்தையில் பிரபலமடைந்துள்ளன. சியோமி நிறுவனம் எம்ஐ 11 ப்ரோ மற்றும் எம்ஐ 11 லைட் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்டை பயன்படுத்திய உலகின் முதல் ஸ்மார்ட்போன் எம்ஐ 11 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது சில உறுதியான தகவலாகவே தெரிகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, எம்ஐ 11 சீரிஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எம்ஐ இந்தியாவின் மார்க்கெட்டிங் லீட் சுமித் சோனல் உறுதிப்படுத்தியுள்ளார் என தெரிகிறது. இருப்பினும் இந்த சாதனத்தின் வெளியீட்டு தேதி இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதேபோல் இந்தியாவில் இந்த சாதனம் எந்தமாதிரியாக அறிமுகப்படுத்தப்படும் என்பதும் இன்னும் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. டிப்ஸ்டரின் இஷன் அகர்வாலின் கசிவுப்படி எம்ஐ 11 லைட் மாடல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சிறந்த கேமராக்கள் மற்றும் அதிக இன்டெர்னல் ஸ்டோரேஜ் மூலம் எம்ஐ 11 ப்ரோ மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த சியோமி திட்டுமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எம்ஐ 11 மாடல் உலக சந்தையில் முதன்முதலில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவித்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து ஆண்ட்ராய்ட் அத்தாரிட்டி வெளியிட்ட அறிக்கையில், வெய்போவில் அறியப்பட்ட டிப்ஸ்டர் டிஜிட்டல் நிலைய தகவலின்படி அடுத்து எம்ஐ 11 ப்ரோ வெளியாக உள்ளதாகவும் இதில் பல சுவாரஸ்ம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. அதேபோல் சியோமி எம்ஐ 11 ப்ரோ மாடல் எம்ஐ 11 போன்ற அதே டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications