Home
Mobile

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் Mi 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்: அம்சங்களே மிரட்டுது!

சியோமி எம்ஐ 11 மற்றும் எம்ஐ 11 லைட் ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

எம்ஐ 11 தொடர் ஸ்மார்ட்போன்

எம்ஐ 11 தொடர் ஸ்மார்ட்போன்

எம்ஐ 11 தொடர் சியோமியின் சமீபத்திய முதன்மை தொடர் ஸ்மார்ட்போனாகும். இந்த தொடர் ஸ்மார்ட்போன்கள் முன்னதாகவே சீன சந்தையில் பிரபலமடைந்துள்ளன. சியோமி நிறுவனம் எம்ஐ 11 ப்ரோ மற்றும் எம்ஐ 11 லைட் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்டை பயன்படுத்திய உலகின் முதல் ஸ்மார்ட்போன் எம்ஐ 11 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது சில உறுதியான தகவலாகவே தெரிகிறது.

விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எம்ஐ 11

விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எம்ஐ 11

இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, எம்ஐ 11 சீரிஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எம்ஐ இந்தியாவின் மார்க்கெட்டிங் லீட் சுமித் சோனல் உறுதிப்படுத்தியுள்ளார் என தெரிகிறது. இருப்பினும் இந்த சாதனத்தின் வெளியீட்டு தேதி இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதேபோல் இந்தியாவில் இந்த சாதனம் எந்தமாதிரியாக அறிமுகப்படுத்தப்படும் என்பதும் இன்னும் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. டிப்ஸ்டரின் இஷன் அகர்வாலின் கசிவுப்படி எம்ஐ 11 லைட் மாடல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை

சிறந்த கேமராக்கள் மற்றும் அதிக இன்டெர்னல் ஸ்டோரேஜ் மூலம் எம்ஐ 11 ப்ரோ மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த சியோமி திட்டுமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எம்ஐ 11 மாடல் உலக சந்தையில் முதன்முதலில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவித்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் கிடைக்கவில்லை.

ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் ஆதரவு

ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் ஆதரவு

ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் எம்ஐ 11 இரட்டை சேமிப்பு வகைகளில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 8ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வேரியண்ட் என்ற இரண்டு வேரியண்ட்களிலும், இரண்டு வண்ண விருப்பங்களிலும் இந்த சாதனம் கிடைக்கும் என தகவல்கள் தெரிகிறது.

இரண்டு வண்ண விருப்பங்கள்

இரண்டு வண்ண விருப்பங்கள்

எம்ஐ 11 ஸ்மார்ட்போன் சாம்பல் நிறம் மற்றும் நீல நிறம் என்ற இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. எம்ஐ 11 உடன் எம்ஐ 11 லைட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எம்ஐ 10ஐ போன்ற ஸ்மார்ட்போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த சாதனத்தின் அம்சங்கள் எதுவும் தெரியவில்லை.

6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம்

6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம்

அதேபோல் டிப்ஸ்டரின் இஷான் அகர்வால் வெளியிட்ட தகவலின்படி, எம்ஐ 11 லைட் இந்தியாவில் மூன்று சேமிப்பு வகைகளில் கிடைக்கும் என தெரிகிறது. அது 6 ஜிபி ரேம் 64 ஜிபி சேமிப்பு, 6 ஜிபி ரேம் 128 ஜிபி சேமிப்பு, 8ஜிபி ரேம் 128 ஜிபி சேமிப்பு என்ற வேரியண்ட்களில் கிடைக்கும் எனவும் எம்ஐ 11 லைட் பிங்க், பிளாக் மற்றும் ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi mi 11 may Launching Soon in India: Here the Expected Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X