Home
Mobile

புனைக்கதையை நிஜமாக்குவோம்: விரைவில் வெளியாகும் சியோமி எம்ஐ 11!

சியோமி எம்ஐ 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என்ற தகவல் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த முழுவிவரங்களை பார்க்கலாம்.

புனைக்கதையை நிஜமாக்குவோம்: விரைவில் வெளியாகும் சியோமி எம்ஐ 11!

இந்தியாவில் எம்ஐ 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்போவதை சியோமி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த மாதம் சீனாவில் சியோமி நிறுவனம் எம்ஐ 11 தொடர் ஸ்மார்ட்போனை ஸ்னாப்டிராகன் 888 உடனான எம்ஐ 11 மாடலை அறிமுகம் செய்தது.

ஒன்பிளஸ் 9 சீரிஸ் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் சியோமி நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வெளியானது. எம்ஐ 11 தொடர் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவித்தாலும் வெளியிடப்படும் தேதியை நிறுவனம் குறிப்பிடவில்லை.

புனைக்கதையை நிஜமாக்குவோம்: விரைவில் வெளியாகும் சியோமி எம்ஐ 11!

இதுகுறித்து வெளியான டுவிட்டில், இதுபோல் சொற்களை பயன்படுத்தி உங்கள் கவனங்களை ஈர்ப்பது கடினம். இருப்பினும் தங்கள் வாய்ப்புகளை எடுத்துக் கொள்கிறோம். மற்றவர்கள் தங்கள் கவனத்தை ஈர்ப்பதில் கவனம் செலுத்தி வரும் நேரத்தில், புனைக் கதைகளை நிஜமாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். அதை நீங்கள் அனுபவிக்க நாங்கள் காத்திருக்க முடியாது என பதிவிட்டுள்ளது.

சியோமி நிறுவனம் முன்னதாகவே மார்ச் 29 அன்று ஒரு நிகழ்வை திட்டமிட்டிருக்கிறது. அதில் நிறுவனம் எம்ஐ 11 ப்ரோ, எம்ஐ 11 அல்ட்ரா, எம்ஐ 11 லைட் ஆகிய சாதனங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என கருதப்படுகிறது. இருப்பினும் இதன் உண்மை தகவல் வெளியாகவில்லை.

எம்ஐ 11 உலகளாவிய மாறுபாடானது 6.81 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, 3200×1440 தெளிவுத்திறனுடன் 1500 நிட்ஸ் உச்ச பிரகாசத்தை கொண்டுள்ளது. அதோடு இதில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது. சியோமி எம்ஐ 11 ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் இயங்குகிறது. இதில் 8ஜிபி ரேம் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி இடம்பெறும் என கூறப்படுகிறது. அதோடு இந்த ஸ்மார்ட்போனில் 4600 எம்ஏஎச் பேட்டரி உடன் 50 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கும் என கூறப்படுகிறது.

புனைக்கதையை நிஜமாக்குவோம்: விரைவில் வெளியாகும் சியோமி எம்ஐ 11!

அதோடு எம்ஐ 11 கேமரா தொகுதியை பொறுத்தவரையில் இதில் மூன்று கேமரா அம்சம் கொண்டிருக்கும் எனவும் அது 108 எம்பி முதன்மை கேமரா, 13 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 5 எம்பி மூன்றாம் நிலை கேமரா இடம்பெற்றிருக்கும் எனவும் கூறப்படுகிறது. கூடுதலாக இதில் 20 எம்பி முன்புற செல்பி கேமரா இடம்பெற்றிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

எம்ஐ 11 தொடர் சியோமியின் சமீபத்திய முதன்மை தொடர் ஸ்மார்ட்போனாகும். இந்த தொடர் ஸ்மார்ட்போன்கள் முன்னதாகவே சீன சந்தையில் பிரபலமடைந்துள்ளன. சியோமி நிறுவனம் எம்ஐ 11 ப்ரோ மற்றும் எம்ஐ 11 லைட் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்டை பயன்படுத்திய உலகின் முதல் ஸ்மார்ட்போன் எம்ஐ 11 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது சில உறுதியான தகவலாகவே தெரிகிறது.

ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் எம்ஐ 11 இரட்டை சேமிப்பு வகைகளில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 8ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வேரியண்ட் என்ற இரண்டு வேரியண்ட்களிலும், இரண்டு வண்ண விருப்பங்களிலும் இந்த சாதனம் கிடைக்கும் என தகவல்கள் தெரிகிறது.

எம்ஐ 11 ஸ்மார்ட்போன் சாம்பல் நிறம் மற்றும் நீல நிறம் என்ற இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. எம்ஐ 11 உடன் எம்ஐ 11 லைட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எம்ஐ 10ஐ போன்ற ஸ்மார்ட்போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த சாதனத்தின் அம்சங்கள் எதுவும் தெரியவில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi MI 11 May Launching Soon in India: Expected Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X