Mi 11 Lite 4ஜி மற்றும் 5ஜி ஆதரவுடன் 'இந்த' விலையில் அறிமுகமாகலாம்..

|

சியோமி நிறுவனம் வரும் மார்ச் 29 ஆம் தேதி ஒரு புதிய வெளியீட்டு நிகழ்வைத் திட்டமிட்டுள்ளது, இதில் நிறுவனம் Mi 11 Lite, Mi 11 Pro மற்றும் Mi 11 Ultra ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது அறிமுகத்திற்கு முன்னதாக, சியோமி மி 11 லைட் விவரக்குறிப்புகள் மற்றும் ரெண்டர்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அது தொடர்பான செய்தியை இந்த பதிவின் மூலம் நாம் பார்க்கலாம்.

Mi 11 Lite 4ஜி மற்றும் 5ஜி ஆதரவுடன் 'இந்த' விலையில் அறிமுகமாகலாம்..

ஜேர்மன் வெளியீடான வின்ஃபியூச்சரின் அறிக்கையின்படி, சியோமி மி 11 லைட்டின் 4 ஜி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு 279 யூரோ என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ. 24,000 ஆகும். அதேபோல், இதன் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு 329 யூரோ என்று விலை கூறப்பட்டுள்ளது. இது தோராயமாக ரூ.28,300 ஆகும். அதேபோல், 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளிவரும் இதன் 5 ஜி வேரியண்டின் மாடலுக்கு 399 யூரோ விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தோராயமாக ரூ. 34,400 ஆகும்.

மற்றும் இதன் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை 429 யூரோ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது சுமார் ரூ .36,900 எனக் கூறப்படுகிறது. மி 11 லைட் 4 ஜி போபா பிளாக், பபல்கம் ப்ளூ மற்றும் பீச் பிங்க் வண்ணங்களில் வரும் என்றும், இதன் 5 ஜி வேரியண்ட் டிரஃபிள் பிளாக், சிட்ரஸ் எல்லோவ் மற்றும் மின்ட் கிரீன் வண்ணங்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. ரெண்டர்களின் படி, Mi 11 லைட் பின்புறத்தில் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும்.

சியோமி மி 11 லைட் சிறப்பம்சம்
சியோமி மி 11 லைட் 4G மூலமாக இயங்குமாறு அமைக்கப்படும் ஸ்னாப்ட்ராகன் 732G உடன் வெளிவரும். அதேபோல், மி 11 லைட் 5G கொண்ட மாடல் ஸ்னாப்ட்ராகன் 765G சிப்செட் உடன் வெளிவரும். வெவ்வேறு சிப்செட்களைத் தவிர, எம்ஐ 11 லைட்டின் 4 ஜி மற்றும் 5 ஜி பதிப்புகள் ஒரே மாதிரியான விவரக்குறிப்புகளைக் கொண்டிருக்கும். மி 11 லைட் ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் ஃபுல் எச்டி + அமோலேட் டிஸ்ப்ளே 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட செல்பி கேமராவுக்கு பஞ்ச் ஹோல் கொண்டிருக்கும். இது திரையில் கைரேகை ஸ்கேனரும் இடம்பெறும்.

Mi 11 லைட் 6GB + 64GB, 6GB + 128GB, மற்றும் 8GB + 128GB சேமிப்பு மாடல்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் MIUI 12 அடிப்படையிலான Android 11 OS இல் இயங்கும். இது 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,250 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கலாம். கேமராக்களைப் பொறுத்தவரை, மி 11 லைட் ஸ்மார்ட்போன் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும், இதில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் 5 எக்ஸ் ஜூம், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், 20 மெகாபிக்சல் செல்பி ஷூட்டருடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi Mi 11 Lite specifications, renders leaked : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X