Home
Mobile

சியோமி Mi 11 Lite ஸ்மார்ட்போனுக்கு கிடைத்தது புதிய அப்டேட்.!

சியோமி மி 11 லைட் ஸ்மார்ட்போனுக்கு MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த அப்டேட் பிப்ரவரி 2022 security patch-யும் கொண்டுவருகிறது. Xiaomiui இன் அறிக்கையின்படி Mi 11 Lite க்கான MIUI 13 புதுப்பிப்பு ஃபார்ம்வேர் பதிப்பு எண் V13.0.1.0.SKQINXM ஐக் கொண்டுள்ளது.

 புதிய அப்டேட் புதிய வால்பேப்பர்

குறிப்பாக இந்த புதிய அப்டேட் புதிய வால்பேப்பர் உட்பட பல்வேறு புதிய அம்சங்களை வழங்குகிறது. மேலும் இப்போது சியோமி மி 11 லைட்
ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சியோமி மி 11 லைட்

சியோமி மி 11 லைட் ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED 10-பிட் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு
1,080x2,400 பிக்சல்கள் தீர்மானம், 60Hz மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் விருப்பங்கள் 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங்ரேட்,கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 20:9 திரை விகிதம் போன்ற பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

சியோமி மி 11 லைட் ஸ்மார்ட்போனில் ஆக்

சியோமி மி 11 லைட் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜிபி சிப்செட் உடன் அட்ரினோ 618 ஜிபியு ஆதரவு உள்ளது. மேலும் இப்போது ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைத்துள்ளதால் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றுதான்கூறவேண்டும்.

சியோமி மி 11 லைட் ஸ்மார்ட்போன் ஆ

சியோமி மி 11 லைட் ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் ஜாஸ் ப்ளூ, டஸ்கனி கோரல் மற்றும் வினைல் பிளாக் ஆகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 5எம்பி டெலிபோட்டோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள்பொருத்தப்பட்டுள்ளன. பின்பு 30fps பிரேம் வீதத்தில் 4K வீடியோ பதிவு செய்யும் ஆதரவு உள்ளது. இதுதவிர செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும்என்றே 16எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

மி மி 11 லைட் ஸ்மார்ட்போனில்

இந்த சியோமி மி 11 லைட் ஸ்மார்ட்போனில் 4250எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் பல்வேறு அட்டகாசமான சென்சார் வசதிகளை கொண்டுள்ளது இந்த சியோமி மி 11 லைட் மாடல்.

சியோமி மி 11 லைட்

சியோமி மி 11 லைட் ஸ்மார்ட்போனில் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி இன்ஃப்ராரெட் (ஐஆர்), ப்ளூடூத் ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரகள் உள்ளன. பின்பு ஹை-ரெஸ் ஆடியோ ஆதரவுடன் டூயல் ஸ்பீக்கர்ஸ் வசதி இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 11 Lite Received Android 12 update: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X