தகவல் எல்லாம் அப்பவே வந்தாச்சு: மிக விரைவில் வரும் எம்ஐ 11 லைட் 4ஜி- எல்லாமே ஆகச்சிறப்பு!
எம்ஐ 11 லைட் 4ஜி 6.55 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வரும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உடன் வரும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் எச்டிஆர் 10 ப்ளஸ் மற்றும் டால்பி விஷன் பாதுகாப்பு ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது.

சியோமி எம்ஐ 11 லைட் 4 ஜி தற்போது விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என டீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் உலக சந்தைகளில் எம்ஐ 11 லைட் 5ஜி அம்சத்தோடு அறிமுகம் செய்யப்பட்டது.
சியோமியின் துமைத் தலைவரும் நிர்வாக இயக்கனருமான மன்குமார் ஜெயின் இன்று டுவிட் ஒன்றை வெளியிட்டார். அதில் எம்ஐ 11 லைட் 4ஜி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்து டுவிட்டரில் வெளியான கருத்துப்படி சியோமி ரசிகர்களிடம் மூன்று விருப்பங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொண்டார். 1. மெலிதான 2. சக்திவாய்ந்த 3. மெல்லிய மற்றும் ஒளி என டுவிட் செய்திருந்தார்.

இருப்பினும் அவரது டுவிட்டில் வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் சரியான பெயரை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் சியோமியின் மார்க்கெட்டிங் முன்னணி சுமித் சோனல் முந்தைய டுவிட்டில், சியோமி எம்ஐ 11 லைட் 4ஜி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை அறிவிப்பதாக கூறினார். மேலும் அவரது டுவிட்டில் தண்ணீரில் மிதக்கும் தொகுதி, லைட் அண்ட் லோடட் என்ற தலைப்பை குறிப்பிட்டிருந்தார், சியோமியின் எம்ஐ 11 லைட் சாதனமானது 157 கிராம் அளவு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
எம்ஐ 11 லைட் 4ஜி விலை குறித்து பார்க்கையில், இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.25,600 ஆக இருக்கும் எனவும் ஸ்மார்ட்போன் பிளாக், இளஞ்சிவப்பு மற்றும் ப்ளூ வண்ண விருப்பங்களில் வரும் எனவும் கூறப்படுகிறது. எம்ஐ 11 லைட் 4ஜி சாதனம் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வரும் என கூறப்படுகிறது.

எம்ஐ 11 லைட் 4ஜி சாதனமானது 6.55 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ள், கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு வீதத்தோடு வருகிறது. எச்டிஆர் 10 ப்ளஸ் மற்றும் டால்பி விஷன் ஆதரவு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 732 ஜி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பாதுகாப்பு அம்சத்திற்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இருக்கிறது.
எம்ஐ 11 லைட் சாதனம் 5ஜி அம்சம் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை மேக்ரோ சென்சார் கேமரா என டிரிபிள் ரியர் கேமராவை கொண்டுள்ளது. இது செல்பி மற்றும் வீடியோ சேட்டிங் என முன்புறத்தில் 20 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
எம்ஐ 11 லைட் ஸ்மார்ட்போனில் 4250 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வதற்கு 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. எம்ஐ 11 லைட் இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில், வைஃபை6, ப்ளூடூத் 5.2 மற்றும் சார்ஜ் செய்வதற்கான யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆதரவு இருக்கிறது.


Click it and Unblock the Notifications