குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் இயங்கும் முதல் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக எம்ஐ 11!

|

எம்ஐ 11 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 உடன் அறிமுகம் செய்யப்படும் என சியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2021 வெளியாகும் என கூறப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி

ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி

குவால்காம் ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் தலைமை நிர்வாக அதிகாரி லீ ஜூன் இந்த தகவலை கூறினார். சமீபத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் முதல் ஸ்மார்ட்போன்களில் சியோமி எம்ஐ 11 ஒன்றாகும்.

சியோமி ப்ரீமியம் 5ஜி ஸ்மார்ட்போன்

சியோமி ப்ரீமியம் 5ஜி ஸ்மார்ட்போன்

அடுத்த ஜெனரேஷன் சியோமி ப்ரீமியம் 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஸ்னாப்டிராகன் 888 மூலம் இயக்கப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும் பல்வேறு உயர்ரக அம்சங்கள் நிறைந்த தயாரிப்பாக அவைகள் இருக்கும் எனவும் தலைமை நிர்வாக அதிகாரி லீஜூன் தெரிவித்தார்.

முன்னதாக வெளியான கசிவுகள்

முன்னதாக வெளியான கசிவுகள்

இருப்பினும் எம்ஐ 11 குறித்த அம்சங்கள் அறிவிக்கவில்லை. முன்னதாக வெளியான கசிவுகளின்படி எம்ஐ11 48 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா கொண்டிருக்கும் எனவும் 6 ஜிபி ரேம் உடன் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

120 ஹெர்ட்ஸ் புதிப்பிப்பு வீதம்

120 ஹெர்ட்ஸ் புதிப்பிப்பு வீதம்

சியோமி எம்ஐ 11 ப்ரோ மாடலுடன் எம்ஐ 11 வெளியாக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இது க்யூஎச்டி ப்ளஸ் ரெசல்யூஷன் டிஸ்ப்ளேவும் அதில் 120 ஹெர்ட்ஸ் புதிப்பிப்பு வீதம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் எம்ஐ 11 ப்ரோ மாடலும் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

file images

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 11 Launch With Latest Qualcomm Snapdragon 888 Chipset

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X