Home
Mobile

இதுக்கு விலைக்குறைப்பாம்- எம்ஐ 10டி ப்ரோ சொந்தமாக்க சரியான நேரம்!

சியோமி எம்ஐ 10டி ப்ரோ ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. நிறுவனம் எம்ஐ 11 சீரிஸ் கொண்டுவரும் நிலையில் எம்ஐ 10டி ப்ரோவுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது.

எம்ஐ 10டி ப்ரோ

எம்ஐ 10டி ப்ரோ

எம்ஐ 10டி ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு ரூ.2000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.39,999 என அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ரூ.2000 குறைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.37,999-க்கு கிடைக்கிறது. மேலும் நிறுவனத்தின் வலைதளத்தில் எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்ட் மூலம் வாங்கும்போது ரூ.2500 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. மெமரி நீட்டிப்பு ஆதரவுக்கு என மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இதில் இருக்கிறது.

 Mi 10T சீரிஸ்

சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு இந்தியாவில் Mi 10T சீரிஸ் 5 ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டபோது, இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் MIUI 12 உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கு கடந்த பிப்., மாதம் ஆண்ட்ராய்டு 11 அப்டேட்டை அறிவித்தது.

ஸ்னாப்டிராகன் 865 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 865 சிப்செட்

சியோமி Mi 10T மற்றும் Mi 10T ப்ரோ 6.67' இன்ச் 2340 × 1080 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் உடன் 8 ஜிபி வரை எல்பிடிடிஆர் 5 ரேம் கொண்டுள்ளது. இது 33W பாஸ்ட் சார்ஜிங் உடன் 5000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இதில் 64 எம்.பி பிரைமரி லென்ஸ், 13 எம்பி அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 5 எம்பி மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றுடன் 20 எம்பி செல்பி கேமராவை கொண்டுள்ளது. Mi 10T ப்ரோ 108 எம்.பி பிரைமரி லென்ஸுடன் வருகிறது.

6.67 இன்ச் டிஸ்ப்ளே

சியோமி எம்ஐ 10டி ப்ரோ சாதனமானது 6.67 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது ஐபிஎஸ் எல்சிடி அம்சத்தோடு வருகிறது மேலும் இதில் 1080 x 2400 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. மேலும் பாதுகாப்பு வசதிக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு 5 ஆதரவு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

108 எம்பி முதன்மை கேமரா

108 எம்பி முதன்மை கேமரா

அட்ரினோ 650 ஜிபியூ அம்சம், 8ஜிபி ரேம் அம்சத்தோடு வருகிறது. எச்டிஆர் பனோரோமா போர்ட்ரைட் இஐஎஸ் லேசர் ஆட்டோபோகஸ் ஓஐஎஸ் 8கே வீடியோ பதிவு உள்ளிட்ட அம்சங்கள் கேமராவில் இருக்கிறது. இதில் 108 எம்பி முதன்மை கேமரா, 13 எம்பி அல்ட்ராவைட், 5 எம்பி என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 20 எம்பி செல்பி கேமரா அம்சம் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 10T Smartphone Gets Price Cut in India- Specification, Current Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X