சியோமி மி 10டி ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
சியோமி நிறுவனம் தனது மி 10டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது. அதன்படி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 10டி ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.35,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.32,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி மி 10டி
அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 10டி மாடலின் முந்தைய விலை ரூ.37,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.34,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விலைகுறைக்கப்பட்ட இந்த சியோமி மி10டி ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் மற்றும் மி.காம் தளங்களில் வாங்க முடியும்.

6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
சியோமி மி 10டி ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2340 × 1080 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 144Hz refresh rate, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 865 எஸ்ஒசி சிப்செட்
இந்த சியோமி மி 10டி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல்.

சியோமி மி 10டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8கே வீடியோ பதிவுசெய்யும் ஆதரவு, 20எம்பி செல்பீ கேமரா மற்றும் பல்வேறு அசத்தலான அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

6ஜிபி/8ஜிபி ரேம்
இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

5000 எம்ஏஎச் பேட்டரி
சியோமி மி 10டி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட்பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications