Home
Mobile

108எம்பி கேமரவுடன் அசத்தலான சியோமி மி 10எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி மி 10எஸ் ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. விரைவில் இந்த புதிய சாதனம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி மி 10எஸ்

சியோமி மி 10எஸ்

டைட்டானியம் பிளாக், ஐஸ் ப்ளூ மற்றும் Pearl White நிறங்களில் இந்த புதிய சியோமி மி 10எஸ் ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
மேலும் இப்போது சியோமி மி 10எஸ் சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சியோமி மி 10எஸ் டிஸ்பிளே

சியோமி மி 10எஸ் டிஸ்பிளே

சியோமி மி 10எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2340 x 1080 பிக்சல் தீர்மானம், 19:5:9 என்ற திரைவிகிதம், எச்டிஆர் பிளஸ் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

 சியோமி மி 10எஸ் பிராசஸர்

சியோமி மி 10எஸ் பிராசஸர்

சியோமி மி 10எஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

சியோமி மி 10எஸ் கேமரா

சியோமி மி 10எஸ் கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி கேமரா சாம்சங் சென்சார் ஒஐஎஸ், 7பி லென்ஸ் + 13எம்பி அல்ட்ரா வைடு அங்கிள் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்+ 2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சியோமி மி 10எஸ் மெமரி

சியோமி மி 10எஸ் மெமரி

சியோமி மி 10எஸ் ஸ்மார்ட்போன் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

சியோமி மி 10எஸ் பேட்டரி

சியோமி மி 10எஸ் பேட்டரி

சியோமி மி 10எஸ் ஸ்மார்ட்போனில் 4780எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ இரட்டை 4ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது சியோமி மி 10எஸ் ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

வியக்கவைக்கும் விலை

வியக்கவைக்கும் விலை

இந்திய மதிப்பில்..
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 10எஸ் விலை ரூ.36,965-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 10எஸ் விலை ரூ.39,205-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 10எஸ் விலை ரூ.42,570-ஆக உள்ளது.

மேலும் இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட சியோமி மி10 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சியோமி மி 10

சியோமி மி 10

சியோமி மி 10 ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 2340x1080பிக்சல் திர்மானம்,19:5:9 என்ற திரைவிகிதம், எச்டிஆர்10 பிளஸ், ஆதரவு மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன்
வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி மி 10  பிராசஸர்

சியோமி மி 10 பிராசஸர்

இந்த சியோமி மி 10 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வசதி மற்றும் அட்ரினோ 650ஜிபியு ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த
ஸ்மார்ட்போன் மாடல்.

சியோமி மி 10 5ஜி ஸ்மார்ட்போனில் 108எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, ஏஐ தொழில்நுட்பம், எல்இடி பிளாஸ் உள்ளிட்ட ஆதரவுகளும் இதில் இடம்பெற்றுள்ளது.

சியோமி மி 10 பேட்டரி

சியோமி மி 10 பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 4780எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30வாட் பாஸ்ட்சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகைசென்சார் உள்ளிட்ட ஆதரவுகளம் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது.

பின்பு யு.எஸ்.பி. டைப்-சி, 5ஜி SA/NSA டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1 உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சியோமி மி 10 5ஜி மாடல். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம். கோரல் கிரீன் மற்றும் டுவிலைட் கிரே நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 10S Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X