Just In
- 17 min ago
மலிவு விலையில் பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.! எவ்வளவு வேகத்தில் பயன்படுத்தலாம் தெரியுமா?
- 55 min ago
அசைக்க முடியாது: மீண்டும் முதலிடம்- ஆசியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி!
- 3 hrs ago
அதிரடி காட்டும் அமேசான்: பாதி விலையில் ஏசி, ஃப்ரிட்ஜ், ஏர் கூலர்கள்- சம்மர் ஃபெஸ்ட் அறிவிப்பு!
- 4 hrs ago
ரெட்மி மேக்ஸ் 86-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்: என்ன விலை? என்னென்ன அம்சங்கள்.!
Don't Miss
- News
மார்ச் 2 முதல் திமுக வேட்பாளர் நேர்காணல்.. பரிந்துரைகள் கூடாது என அறிவிப்பு
- Movies
வொர்க் மோடாம்.. விக்ரமின் கோப்ரா படத்தில் இணைந்த கிரிக்கெட் வீரர்.. வைரலாகும் போட்டோ!
- Finance
செக் இன் லக்கேஜ் இல்லையெனில் விமான கட்டணத்தில் தள்ளுபடி.. புதிய அறிவிப்பு..!
- Sports
பல் பிடுங்கிய பாம்பு.. இந்தியாவின் டெஸ்ட் வெற்றியால் சிக்கலில் ஐசிசி.. எல்லா பக்கமும் வசமான செக்!
- Lifestyle
சர்க்கரை நோயாளிகளே! நீங்க எந்த பழம் சாப்பிடலாம்-ன்னு சரியா தெரியலையா? இத படிங்க...
- Automobiles
அதிக மைலேஜை தரும் வாகனங்களை தேடும் மக்கள்... சூழ்நிலையை சாதமாக்கிக்க சிறப்பு சலுகையை அறிவித்த ஹீரோ!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Mi 10i ஸ்மார்ட்போன் இந்தியாவில் 3 வேரியண்ட்டாக அறிமுகம்.. முழுவிபரம், விலை மற்றும் விற்பனை தகவல்..
சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது சமீபத்திய ஸ்மார்ட்போன் மாடலாக புதிய Mi 10i சாதனத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. Mi 10i ஸ்மார்ட்போன் பெயரில் 'i' என்பது இந்தியாவைக் குறிக்கிறது என்று சியோமி நிறுவனம் கூறியுள்ளது. இந்தியர்களை மனதில் வைத்து இந்த புதிய ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த புதிய போனின் விலை, விற்பனை தேதி மற்றும் சிறப்பம்ச தகவலை இப்போது பார்க்கலாம்.

Mi 10 வரிசையில் சேரும் புதுவரவு
இந்த ஸ்மார்ட்போன் பற்றிய முதல் சிறப்பம்சமே இதில், சாம்சங் HM2 சென்சார் வழங்கப்பட்டுள்ளது என்பது தான். இந்தியாவில் சாம்சங் HM2 சென்சாருடன் வெளிவரும் முதல் ஸ்மார்ட்போன் Mi 10i சாதனம் தான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் Mi 10, Mi 10 Pro, Mi 10 Lite மற்றும் Mi 10 Lite Zoom Edition உடன் 10 சீரிஸ் வரிசையில் சேர்ந்துள்ளது. Mi 10i இன் முக்கிய விவரக்குறிப்புகள் பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாம்.

இந்தியர்களை கருத்தில் கொண்டு முக்கிய சிறப்பம்சம்
Mi 10i ஸ்மார்ட்போன் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இதில் 108 மெகாபிக்சல் பிரைமரி கேமராவுடன் குவாட் ரியர் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது சாம்சங் எச்எம் 2 சென்சார் மற்றும் ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட் உடன் வெளிவந்துள்ளது. நவம்பர் மாத இறுதியில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி நோட் 9 புரோ 5 ஜி - இன் மறுபெயரிடப்பட்ட மாறுபாடாக Mi 10i அறிமுகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!

இந்தியாவில் Mi 10i கிடைக்கும் விலை மற்றும் விற்பனை விபரம்
Mi 10i ஸ்மார்ட்போனின் முதல் பாதிப்பான 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ. 20,999 ஆகும். இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ. 21,999 ஆகும். அதேபோல், இதன் உயர் திறன் ஸ்டோரேஜ் மாடலான 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட் ரூ. 23,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய போன் பசிபிக் சன்ரைஸ், மிட்நைட் பிளாக் மற்றும் அட்லாண்டிக் ப்ளூ கலர் விருப்பங்களில் கிடைக்கிறது.

விற்பனை மற்றும் சலுகை விபரம்
Mi 10i அமேசான் இந்தியா, மி.காம் , மி ஸ்டுடியோ கடைகள் மற்றும் மி ஹோம் கடைகளில் ஜனவரி 7 முதல் மதியம் 12 மணிக்கு (நண்பகல்) விற்பனைக்கு வரும். அதேபோல், விரைவில் நாடு முழுவதிலும் உள்ள 10,000+ சில்லறை கடைகளிலும் விற்பனைக்கு கிடைக்கும். Mi 10i ஸ்மார்ட்போனின் திறந்த விற்பனை ஜனவரி 8 முதல் மதியம் 12 மணிக்கு (மதியம்) தொடங்கும், வெளியீட்டுச் சலுகையாக ரூ. 10,000 மதிப்பிலான ஜியோ நன்மை மற்றும் ரூ.2000 மதிப்பிலான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கிரெடிட் கார்டு நன்மை கிடைக்கும்.

Mi 10i சிறப்பம்சம்
- 6.67' இன்ச் 1080 x 2400 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் உடன் கூடிய HDR மற்றும் HDR10 + டிஸ்பிளே
- 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்
- முன்னும் பின்னும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
- அட்ரினோ 619 ஜி.பீ.யுடன் 8nm குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட்

- 6ஜிபி / 8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி / 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்
- MIUI 12 உடன் கூடிய ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
- குவாட் ரியர் கேமரா அமைப்பு
- 108 மெகாபிக்சல் சாம்சங் எச்எம் 2 சென்சார் பிரைமரி கேமரா
- 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார்
- 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
- 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
- 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா

- டூயல் நானோ சிம்
- 5 ஜி
- 4ஜி வோல்ட்-இ
- வைஃபை
- புளூடூத்

- யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
- 3.5 மிமீ ஆடியோ ஜாக்
- டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்
- 33W வேகமான சார்ஜிங் ஆதரவு
- 4820mAh பேட்டரி
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190