Mi 10i ஸ்மார்ட்போன் இந்தியாவில் 3 வேரியண்ட்டாக அறிமுகம்.. முழுவிபரம், விலை மற்றும் விற்பனை தகவல்..

|

சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது சமீபத்திய ஸ்மார்ட்போன் மாடலாக புதிய Mi 10i சாதனத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. Mi 10i ஸ்மார்ட்போன் பெயரில் 'i' என்பது இந்தியாவைக் குறிக்கிறது என்று சியோமி நிறுவனம் கூறியுள்ளது. இந்தியர்களை மனதில் வைத்து இந்த புதிய ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த புதிய போனின் விலை, விற்பனை தேதி மற்றும் சிறப்பம்ச தகவலை இப்போது பார்க்கலாம்.

Mi 10 வரிசையில் சேரும் புதுவரவு

Mi 10 வரிசையில் சேரும் புதுவரவு

இந்த ஸ்மார்ட்போன் பற்றிய முதல் சிறப்பம்சமே இதில், சாம்சங் HM2 சென்சார் வழங்கப்பட்டுள்ளது என்பது தான். இந்தியாவில் சாம்சங் HM2 சென்சாருடன் வெளிவரும் முதல் ஸ்மார்ட்போன் Mi 10i சாதனம் தான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் Mi 10, Mi 10 Pro, Mi 10 Lite மற்றும் Mi 10 Lite Zoom Edition உடன் 10 சீரிஸ் வரிசையில் சேர்ந்துள்ளது. Mi 10i இன் முக்கிய விவரக்குறிப்புகள் பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாம்.

இந்தியர்களை கருத்தில் கொண்டு முக்கிய சிறப்பம்சம்

இந்தியர்களை கருத்தில் கொண்டு முக்கிய சிறப்பம்சம்

Mi 10i ஸ்மார்ட்போன் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இதில் 108 மெகாபிக்சல் பிரைமரி கேமராவுடன் குவாட் ரியர் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது சாம்சங் எச்எம் 2 சென்சார் மற்றும் ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட் உடன் வெளிவந்துள்ளது. நவம்பர் மாத இறுதியில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி நோட் 9 புரோ 5 ஜி - இன் மறுபெயரிடப்பட்ட மாறுபாடாக Mi 10i அறிமுகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!

இந்தியாவில் Mi 10i கிடைக்கும் விலை மற்றும் விற்பனை விபரம்

இந்தியாவில் Mi 10i கிடைக்கும் விலை மற்றும் விற்பனை விபரம்

Mi 10i ஸ்மார்ட்போனின் முதல் பாதிப்பான 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ. 20,999 ஆகும். இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ. 21,999 ஆகும். அதேபோல், இதன் உயர் திறன் ஸ்டோரேஜ் மாடலான 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட் ரூ. 23,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய போன் பசிபிக் சன்ரைஸ், மிட்நைட் பிளாக் மற்றும் அட்லாண்டிக் ப்ளூ கலர் விருப்பங்களில் கிடைக்கிறது.

விற்பனை மற்றும் சலுகை விபரம்

விற்பனை மற்றும் சலுகை விபரம்

Mi 10i அமேசான் இந்தியா, மி.காம் , மி ஸ்டுடியோ கடைகள் மற்றும் மி ஹோம் கடைகளில் ஜனவரி 7 முதல் மதியம் 12 மணிக்கு (நண்பகல்) விற்பனைக்கு வரும். அதேபோல், விரைவில் நாடு முழுவதிலும் உள்ள 10,000+ சில்லறை கடைகளிலும் விற்பனைக்கு கிடைக்கும். Mi 10i ஸ்மார்ட்போனின் திறந்த விற்பனை ஜனவரி 8 முதல் மதியம் 12 மணிக்கு (மதியம்) தொடங்கும், வெளியீட்டுச் சலுகையாக ரூ. 10,000 மதிப்பிலான ஜியோ நன்மை மற்றும் ரூ.2000 மதிப்பிலான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கிரெடிட் கார்டு நன்மை கிடைக்கும்.

முதல் 5 நிமிடத்தில் 350,000 யூனிட்கள் விற்று தீர்த்த Xiaomi Mi 11 ஸ்மார்ட்போன்.. அப்படி என்ன இருக்கு இதில்?முதல் 5 நிமிடத்தில் 350,000 யூனிட்கள் விற்று தீர்த்த Xiaomi Mi 11 ஸ்மார்ட்போன்.. அப்படி என்ன இருக்கு இதில்?

Mi 10i சிறப்பம்சம்

Mi 10i சிறப்பம்சம்

  • 6.67' இன்ச் 1080 x 2400 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் உடன் கூடிய HDR மற்றும் HDR10 + டிஸ்பிளே
  • 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்
  • முன்னும் பின்னும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
  • அட்ரினோ 619 ஜி.பீ.யுடன் 8nm குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட்
  • கேமரா
    • 6ஜிபி / 8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி / 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்
    • MIUI 12 உடன் கூடிய ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
    • குவாட் ரியர் கேமரா அமைப்பு
    • 108 மெகாபிக்சல் சாம்சங் எச்எம் 2 சென்சார் பிரைமரி கேமரா
    • 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார்
    • 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
    • 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
    • 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
    • SBI வங்கியில் சம்பளக் கணக்கிற்கு இவ்வளவு நன்மைகளா? தெரியாத முக்கிய விஷயங்களை உடனே தெரிந்துகொள்ளுங்கள்..SBI வங்கியில் சம்பளக் கணக்கிற்கு இவ்வளவு நன்மைகளா? தெரியாத முக்கிய விஷயங்களை உடனே தெரிந்துகொள்ளுங்கள்..

      5 ஜி
      • டூயல் நானோ சிம்
      • 5 ஜி
      • 4ஜி வோல்ட்-இ
      • வைஃபை
      • புளூடூத்
      • பேட்டரி
        • யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
        • 3.5 மிமீ ஆடியோ ஜாக்
        • டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்
        • 33W வேகமான சார்ஜிங் ஆதரவு
        • 4820mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 10i Launched in India With 108-Megapixel Samsung HM2 Sensor and 5G Support : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X