Mi 10i விற்பனை அமேசானில் உறுதியானது.. முக்கியமான தகவல்களும் வலைத்தளத்தில் வெளியானது..
சியோமி நிறுவனம் வரும் ஜனவரி 5 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு இந்தியாவில் Mi 10i ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகப்படுத்தவுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்போது அறிமுகத்திற்கு முன்னதாக, வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் அமேசானில் வழியாக விற்பனைக்குக் கிடைக்கும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இத்துடன் சில முக்கிய கூடுதல் விபரங்களும் வெளியாகியுள்ளது.

ரெட்மி 9 பவர் உடன் Mi 10i போஸ்டர்
அமேசான் இந்தியா வலைத்தளம் பிளாட்ஃபார்மில் ரெட்மி 9 பவர் கிடைப்பதைக் குறிக்கும் டீஸர் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு, கிடைக்கும் தன்மை, விலை நிர்ணயம், சலுகைகள் மற்றும் பல தொடர்பான அனைத்து அப்டேட்களையும் பயனர்களுக்கு அறிவிக்க அனுமதிக்கும் 'Notify me' பட்டனும் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் தனியாக, சியோமி Mi 10i அறிமுகமாகும் போஸ்டரும் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

ஸ்டோரேஜ் மற்றும் கலர் வேரியண்ட் தகவல்
டிவிட்டர் பயனர் இந்திரனில் சக்ரவர்த்தி என்பவர் சியோமி Mi 10i ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் மற்றும் கலர் வேரியண்ட் பற்றிய தகவல்களை கசியவிட்டுள்ளார். அவரைப் பொறுத்தவரை, ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வகைகளில் வரும் என்று தெரிவித்துள்ளார்.

Xiaomi Mi 10i வண்ண விருப்பங்கள்
இந்த போன் மிட்நைட் பிளாக், பசிபிக் சன்ரைஸ் மற்றும் அட்லாண்டிக் ப்ளூ வண்ணங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை பற்றிய விபரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அமேசான் தளத்தில் குறிப்பிடப்படவில்லை. அடுத்த வார இறுதியில் விலை பற்றிய விபரங்கள் வெளியாகலாம் என்று கருதப்படுகிறது.

Xiaomi Mi 10i எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள்
- 6.67' இன்ச் 2400 x 1080 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே
- 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 240 ஹெர்ட்ஸ் தொடு மாதிரி வீதம்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட்
- 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 512 ஜிபி வரை ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 11 உடன் கூடிய எம்ஐயுஐ 12
- குவாட் கேமரா அமைப்பு
- 108 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
- 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்
- 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார்
- 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
- 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
- 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 4,820 எம்ஏஎச் பேட்டரி



Click it and Unblock the Notifications