Xiaomi Mi 10 Pro: 16ஜிபி ரேம், 108எம்பி கேமராவுடன் விரைவில் களமிறங்கும் சியோமி மி10 ப்ரோ.!
தற்சமயம் வெளியான தகவலின் அடிப்படையில் சியோமி நிறுவனம் வரும் பிப்ரவரி 11-ம் தேதி மி 10 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை உறுதிபடுத்தும்படி தற்போது மி 10ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சமீபத்திய MIUI 11 அப்டேட் கோட்-இல் காணப்பட்டுள்ளது, இதனுடன் மி10 ப்ரோவின் சில அம்சங்களும் வெளிவந்துள்ளன.

சியோமி மி10 ப்ரோ
இப்போது சியோமி மி 10 ஸ்மார்ட்போன் ஆனது M2001J2C என்ற குறியீட்டு பெயரின் கீழும், பின்பு சியோமி மி 10 ப்ரோ ஆனது M2001J1C என்கிற குறியீட்டு பெயரும் மியூஐ 11 எ20.1.6 குறியீட்டில் காணப்பட்டுள்ளது. அதன்படி சியோமி மி10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 66வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று கேமரா சென்சார்கள்
குறிப்பாக இந்த சாதனத்தில் உள்ள க்வாட் கேமரா அமைப்பில்,மூன்று கேமரா சென்சார்கள் செங்குத்தாக இருக்க, எல்.ஈ.டி ஃபிளாஷ் உடன் தனித்தனியாக வைக்கப்படும் நான்காவது கேமராவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

2080 x 1080 பிக்சல் திர்மானம்
சியோமி மி 10ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 2080 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 865சிப்செட்
இந்த சியோமி மி 10ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865சிப்செட் வசதியுடன் வெளிவரும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கண்டிப்பாக ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்

16ஜிபி ரேம்
குறிப்பாக இந்த மி 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி வசதியும் இடம்பெற்றுள்ளது,இதுதவிர கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியுடன் இந்த சாதனம் களமிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4000எம்ஏஎச் பேட்டரி
சியோமி மி 10ப்ரோ சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு யூ.எஸ்.பி-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், என்எப்சி, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவரும்.


Click it and Unblock the Notifications








