108எம்பி கேமரா கொண்ட சியோமி மி 10 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது.!

|

சியோமி நிறுவனத்தின் சியோமி மி 10 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தற்சமயம் அமேசான், மி.காம் உள்ளிட்ட வலைதளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் சிலு ஆஃப்லைன் கடைகள் வழியாகவும் இந்த சாதனத்தை வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் கேஷ்பேக் சலுகை கிடைக்கும். மேலும்
இந்த சாதனத்தின் அம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட பல தகவல்களைப் பார்ப்போம்.

பிக்சல் திர்மானம்,19:5:9 என்ற திரைவிகிதம்

சியோமி மி 10 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் HD+ AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 2340x1080 பிக்சல் திர்மானம்,19:5:9 என்ற திரைவிகிதம், எச்டிஆர்10 பிளஸ், ஆதரவு மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன்
வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்டோ-கோர்

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வசதி மற்றும் அட்ரினோ 650ஜிபியு ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

FASTag பயனர்கள் உஷார்! உடனே இதை செக் பண்ணுங்க - மத்திய அரசு அதிரடி உத்தரவு!FASTag பயனர்கள் உஷார்! உடனே இதை செக் பண்ணுங்க - மத்திய அரசு அதிரடி உத்தரவு!

சாதனத்தில் 8ஜிபி ரேம் ம

சியோமி மி 10 5ஜி சாதனத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாகமெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.

ன்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.

சியோமி மி 10 5ஜி ஸ்மார்ட்போனில் 108எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, ஏஐ தொழில்நுட்பம்,எல்இடி பிளாஸ் உள்ளிட்ட ஆதரவுகளும் இதில் இடம்பெற்றுள்ளது.

ஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்

இந்த ஸ்மார்ட்போனில் 4780எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளிட்ட ஆதரவுகளம் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது.

யோமி மி 10 5ஜி மாடல். மே

பின்பு யு.எஸ்.பி. டைப்-சி, 5ஜி SA/NSA டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1 உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது
இந்த சியோமி மி 10 5ஜி மாடல். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம். கோரல் கிரீன்
மற்றும் டுவிலைட் கிரே நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும்.

உள்ளடக்க மெமரி வசதி

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட சியோமி மி 10 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,999-ஆக உள்ளது, பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட சியோமி மி 10 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.54,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 10 now available for sale in India and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X