Xiaomi Mi 10: பிப்ரவரி 13: அசத்தலான சியோமி மி10 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
சியோமி நிறுவனத்தின் மி 10 ஸ்மார்ட்போன் ஆனது வரும் பிப்ரவரி 13-ம் தேதி வெளியாகும் என தற்சமயம் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் உடன் சியோமி மி10 ப்ரோ ஸ்மார்ட்போனும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த சியோமி மி 10 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சியோமி மி 10
வெளியான தகவலின் அடிப்படையில் சியோமி மி 10 ஸ்மார்ட்போன் ஆனது 6.57-இன்ச் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த திரைவிகிதம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவரும்.

சியோமி மி 10 ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளதுஎனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேமராக்கள்
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி சென்சார் + 48எம்பி சென்சார் + 12எம்பி சென்சார் + 8எம்பி சென்சார் எனமொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 32எம்பி +8எம்பி டூயல் செல்பீ கேமரா எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள்; அடக்கம்.

ஆண்ட்ராய்டு 10
சியோமி மி 10 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865சிப்செட் வசதி இடம் பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு10
இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

4500எம்ஏஎச் பேட்டரி
சியோமி மி 10 ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 45வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன்


Click it and Unblock the Notifications