Xiaomi Mi 10, Mi 10 Pro ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! 108MP கேமரா+ 30W வயர்லெஸ் சார்ஜிங்.!

|

சாம்சங் நிறுவனம் அன்மையில் இசட் பிளப் மற்றும் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதை தொடர்ந்து உடனே சியோமி நிறுவனமும் தனது சியோமி மி 10 மற்றும் சியோமி மி 10ப்ரோ ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கு 108எம்பி கேமராவு ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

அட்டகாசமான டிஸ்பிளே வசதி

அட்டகாசமான டிஸ்பிளே வசதி

சியோமி மி 10 மற்றும் மி 10ப்ரோ ஸ்மார்ட்போன்கள் 6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED எச்டிஆர் பிளஸ்டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 19:5:9 என்ற திரைவிகிதம் மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதம், 1,200 nits பிரைட்நஸ், 5,00,000: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ, டிசி டிம்மிங், டிசிஐ-பி 3 கலர் வரம்பு ஆதரவு
உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்

எதிர்பார்த்த சிப்செட் வசதி

எதிர்பார்த்த சிப்செட் வசதி

இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் 2.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 650ஜிபியு வசதியையும் கொண்டுள்ளது. மேலும் இந்த இரண்டு சாதனங்களுக்கும் ஆண்ட்ராய்டு 10 வசதி வழங்கப்பட்டுள்ளது,எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

உஷார் மக்களே: ஸ்கிம்மர் கருவி மூலம் ஏடிஎம்மில் பணம் கொள்ளை- மீண்டும் தலையெடுக்கும் விவகாரம்உஷார் மக்களே: ஸ்கிம்மர் கருவி மூலம் ஏடிஎம்மில் பணம் கொள்ளை- மீண்டும் தலையெடுக்கும் விவகாரம்

சியோமி மி 10 கேமரா அம்சங்கள்

சியோமி மி 10 கேமரா அம்சங்கள்

சியோமி மி 10 ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி மெயின் கேமரா + 13எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி சென்சார் + 2எம்பி சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சியோமி மி 10ப்ரோ கேமரா அம்சங்கள்

சியோமி மி 10ப்ரோ கேமரா அம்சங்கள்

சியோமி மி 10ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி மெயின் கேமரா + 20எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 12எம்பிகேமரா+ 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 20எம்பிசெல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரியில் சிறிய மாற்றம்

பேட்டரியில் சிறிய மாற்றம்

இரண்டு ஸ்மார்ட்போன்களின் பேட்டரிகளில் சிறிய மாற்றம் உள்ளது என்றுதான் கூறவேண்டும், அதன்படி சியோமி மி10ஸ்மார்ட்போனில் 4780எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. பின்பு மி 10ப்ரோ ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி மற்றும் 50வாட் வயர் பாஸ்ட் சார்ஜிங், 30வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங்வசதியும் உள்ளது.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி உள்ளது, மேலும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.1111 ax (2.4GHz + 5GHz) 8 x / MU-MIMO, புளூடூத் 5.1, ஜிபிஎஸ் (எல் 1 + எல் 5), என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

என்ன கொடுமை சார் இது, டாப் 10 லிஸ்டில் இடம்பிடித்த பார்ன் வெப்சைட்- எத்தனை கோடி பார்வையாளர்கள்?என்ன கொடுமை சார் இது, டாப் 10 லிஸ்டில் இடம்பிடித்த பார்ன் வெப்சைட்- எத்தனை கோடி பார்வையாளர்கள்?

சியோமி மி 10 விலை எவ்வளவு தெரியுமா?

சியோமி மி 10 விலை எவ்வளவு தெரியுமா?

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 10 விலை 3999யுவான்(இந்திய மதிப்பில் ரூ.40,920)
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 10 விலை 4299யுவான்(இந்திய மதிப்பில் ரூ.43,990)
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 10 விலை 4699யுவான்(இந்திய மதிப்பில் ரூ.48,080)

சியோமி மி 10ப்ரோ விலை எவ்வளவு தெரியுமா?

சியோமி மி 10ப்ரோ விலை எவ்வளவு தெரியுமா?

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 10ப்ரோ விலை 4999யுவான்(இந்திய மதிப்பில் ரூ.51,150)
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 10ப்ரோ விலை 5499யுவான்(இந்திய மதிப்பில் ரூ.56,270)
12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 10ப்ரோ விலை 5999யுவான்(இந்திய மதிப்பில் ரூ.61,370)

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 10, Mi 10 Pro Launched: 30W Wireless Charging, 108MP and More Details : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X