ஸ்னாப்டிராகன் 870 SoC செயலியுடன் சியோமி எம்ஐ 10 5ஜி விரைவில் அறிமுகம்: லீக்கான விலை!
சியோமி எம்ஐ 10 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் விலை மற்றும் அம்சங்கள் குறித்து லீக்கான தகவல்களை பார்க்கலாம்.

MI10 5G ஸ்மார்ட்போன்
MI10 5G சாதனத்தின் புதிய வேரியண்ட்டை சீன சந்தையில் அறிமுகப்படுத்த சியோமி நிறுவனம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சம் இது புதிய ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படும் என டிப்ஸ்டரின் புதிய கசிவு தெரிவிக்கிறது.

எம்ஐ10 5ஜி சாதனத்தின் விலை
எம்ஐ10 5ஜி சாதனத்தின் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. எம்ஐ 10 5ஜி ஸ்மார்ட்போன் புதிய மாடலின் விலை சிஎன்ஒய் 3,500 ஆக உள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.39,000 ஆக இருக்கிறது. அதோடு ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்ட எம்ஐ11 ஸ்மார்ட்போனை விட இதன் விலை குறைவாக உள்ளது.

எம்ஐ 11 ஸ்மார்ட்போனின் விலை
எம்ஐ 11 விலை குறித்து பார்க்கையில் இது 3,999 யுவானாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.45,000 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்
200 எம்பி பிரைமரி கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போன் வரும் என வதந்திகள் பரவியது. இந்த நிலையில் எம்ஐ 11 ப்ரோவை சீனாவில் நிறுவனம் அறிமுகம் செய்யஉள்ளது. இது 80 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 6.8 இன்ச் 2கே அமோலெட் டிஸ்ப்ளே ஆகியவற்றுடன் வரும் என கூறப்படுகிறது.

வேறு மாற்றங்கள் இருக்குமா
சியோமி எம்ஐ 10 புதிய வேரியண்ட்டுடன் வருவதால் இந்த ஸ்மார்ட்போனில் புதிய சிப்செட்டை தவிர கூடுதல் அம்சங்கள் மற்றும் வேறு ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். முந்தைய சியோமி எம்ஐ 10 கடந்த மே மாதம் 2020 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

6.67 இன்ச் வளைந்த அமோலெட் டிஸ்ப்ளே
இந்த ஸ்மார்ட்போனின் குவாட் கேமரா அமைப்பு குறித்து பார்க்கையில், இதில் 108 எம்பி பிரதான கேமரா, 6.67 இன்ச் வளைந்த அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் 30 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு ஆகியவைகளை கொண்டுள்ளது. அதோடு இதில் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி ஆகியவைகளை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.49,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications