Home
Mobile

பக்காவான பட்ஜெட் விலையில் 6000mAh பேட்டரி.. Redmi, Poco-வின் புது போன்கள்.. ஜூலை 2025 இல் அறிமுகம்?

ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் கூடிய விரைவில், அதன் துணை நிறுவனங்கள் ஆன ரெட்மி (Redmi) மற்றும் போக்கோ (POCO) ஆகிய பிராண்டுகளின் கீழ் 2 புதிய பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது. என்ன மாடல்? எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்கள்? ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி 15சி (Redmi 15C) மற்றும் போக்கோ நிறுவனத்தின் கீழ் போக்கோ சி85 (Poco C85) ஆகியவைகள் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே ஜிஎஸ்எம்ஏ இஎம்இஐ (GSMA IMEI) தரவுத்தளத்தில் காணப்பட்டுள்ளன.

Redmi, Poco-வின் புது போன்கள்.. ஜூலை 2025 இல் அறிமுகம்?

எப்போது அறிமுகம் ஆகும்? இவ்விரு ஸ்மார்ட்போன்களின் மாடல் எண்களின் கட்டமைப்பின் அடிப்படையில், ரெட்மி 15சி மற்றும் போக்கோ சி85 ஆகிய இரண்டுமே ஜூலை 2025 இல் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது. இருப்பினும் ஷாவ்மீ நிறுவனத்தின் லான்ச் டைம்லைன் எப்போதுமே கணிக்க முடியாதபடி இருக்கும் என்பதால்.. இது எதிர்பார்ப்பதை விட முன்கூட்டியே அல்லது தாமதமாக கூட அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

ரெட்மி 15சி மற்றும் போக்கோ சி75 ஸ்மார்ட்போன்களில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? தற்போது வரை, அதிகாரப்பூர்வ அம்சங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த பிரிவில் ஷாவ்மீ நிறுவனத்தின் முந்தைய வெஅறிமுகங்களை கருத்தில் கொண்டால், சில யூகங்களை செய்யும் முடியும்

அப்படியாக ரெட்மி 15சி மற்றும் போக்கோ சி85 ஆகிய இரண்டுமே ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) பேனல்கள் மற்றும் ஒரு என்ட்ரி-லெவல் சிப்செட்டுடன் அறிமுகம் செய்யப்படலாம். பெரும்பாலும் இது மீடியாடெக் ஹீலியோ ஜி99 (MediaTek Helio G99) வரம்பில் இருக்கலாம். இது eMMC 5.1 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட LPDDR4X ரேம் உடன் வரும். மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் 18W முதல் 33W வரையிலான பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் சுமார் 6000mAh பேட்டரியைபேக் செய்யலாம்.

ஏன் இரண்டுமே ஒரே அம்சங்களுடன் வருகின்றன? முன்னரே குறிப்பிட்டபடி ரெட்மி மற்றும் போக்கோ ஆகிய இரண்டும் ஷாவ்மீ நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் ஆகும். ஷாவ்மீ ஒரே ஸ்மார்ட்போனை இரண்டு வெவ்வேறு பிராண்டுகளின் கீழ் மறுபெயரிடும் பழக்கத்தை நீண்ட காலமாகவே கொண்டுள்ளது. அதாவது ஒரே மாதிரியான வன்பொருளுடன்.. வெவ்வேறு பிராண்டிங் மற்றும் வடிவமைப்பு மாற்றங்களை கொண்டிருக்கும்.

ரெட்மி 15சி என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? பெரும்பாலும் இது ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் அறிமுகம் செய்யப்படும். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரூ.12,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். ஏனென்றால் ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது

ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- டூயல் சிம்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.88-இன்ச் HD+ LCD டிஸ்பிளே
- நீல ஒளி உமிழ்வுகளுக்கான TÜV Rheinland சான்றிதழ்
- TÜV Rheinland Flicker Free சான்றிதழ்
- சர்க்காடியன் சான்றிதழ்

- 4என்எம் Snapdragon 4 Gen 2 SoC சிப்செட்
- 6GB வரை LPDDR4X RAM
- பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜை பயன்படுத்தி ரேம்-ஐ கிட்டத்தட்ட 12GB வரை விரிவாக்க முடியும்.
- 128GB வரை ஸ்டோரேஜ்
- microSD கார்டு ஸ்லாட் வழியாக 1TB வரை விரிவாக்கலாம்

- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப்/1.8 அபெர்க்ஷர் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP52 மதிப்பீடு
- 18W பாஸ்ட் சார்ஜிங்
- 5160mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi May Launch Redmi 15C Poco C85 Budget Phones in July 2025 What to Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X