Home
Mobile

சியோமி ரெட்மீ 3எஸ் பிளஸ் : அசத்தும் அம்சங்கள்..!

By Muthuraj

இ-காமர்ஸ் தளங்களில் சியோமி ஸ்மார்ட்போன்கள் ஒரு பெரிய அளவிலான விசிறிகளை இந்தியாவில் பெற்றுள்ளது என்றே கூறலாம். குறிப்பாக சியோமி ரெட்மீ 3எஸ்,ரெட்மீ நோட் 3, ரெட்மீ 3எஸ் ப்ரைம் போன்ற தங்களின் மலிவு விலை மற்றும் சிறப்பான வன்பொருள் அம்சங்கள் கொண்டு இந்திய தொழில்நுட்ப பார்வையாளர்களை சியோமியால் ஈர்க்க முடிந்தது.

இருப்பினும், சீன தொழில்நுட்ப நிறுவனமான சியோமி ஆனது பிளாஷ் சேல்கள் மூலம் சாதனங்கள் வாடிக்கையாளர்களின் கைகளுக்கு அதிகம் சென்றடையவில்லை என்பதற்காக விமர்சிக்கப்படுகிறது. இறுதியாக அதன் சமீபத்திய வெளியீடான ரெட்மீ 3எஸ் பிளஸ் கருவி அறிமுகப்படுத்தப்பட்டபோது உண்மையில் சில மாற்றங்களை செய்துள்ளது சியோமி நிறுவனம்.

முக்கியமான மைல்கல் :

முக்கியமான மைல்கல் :

சியோமி ரெட்மீ 3எஸ் பிளஸ் கருவிதான் இந்திய சந்தையில் சியோமி நிறுவனத்தின் முதல் ஆப்லைன் பிரத்தியேக ஸ்மார்ட்போன் ஆகும். இதன் மூலம் ரெட்மீ 3எஸ் பிளஸ் கருவியானது மி இந்தியா வரலாற்றில் ஒரு வலுவான ஆஃப்லைனில் சில்லறை இருப்பை உண்டாக்கி ஒரு முக்கியமான மைல்கல்லை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இந்தியா முழுவதிலும்

இந்தியா முழுவதிலும்

அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தொடங்கி 7500-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடம் இந்தியா முழுவதிலும் ரெட்மீ 3 எஸ் பிளஸ் கருவி கிடைக்கப்பெறுகின்றது.

டிஸ்ப்ளே மற்றும் கேமிரா :

டிஸ்ப்ளே மற்றும் கேமிரா :

5 இன்ச் எச்டி (1280 x 720 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட இக்கருவியின்பின்பக்க கேமிரா எப்/2.0 அப்பர்ஷெர், எல்இடி பிளாஷ், பிடிஏஎப் கொண்ட13 எம்பி கேமிரா உடன் 1080பி பார்மட்டில் ரெகார்ட் செய்யும் திறன் கொண்டது. முன்பக்க கேமிராவோ எப்/2.2 அப்பர்ஷெர் உடன் 1080பி பார்மட்டில் ரெகார்ட் செய்யும் 5எம்பி திறன் கொண்டதாகும்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ப்ராசஸர் :

ப்ராசஸர் :

இக்கருவியானது 4 x 1.2 ஜிகாஹெர்ட்ஸ் கோர்டெக்ஸ் ஏ53 கோர்ஸ் + 4 x 1.5 ஜிகாஹெர்ட்ஸ் கோர்டெக்ஸ் ஏ53 கோர்ஸ் பயன்படுத்தும் ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப் டிராகன் 430 சிபியூ மூலம் சக்தியூட்டப்படுகின்றது. கிராபிக்கல் வேலைகளை அட்ரெனோ 505 ஜிபியூ உடன் இணைந்த 64 பிட் ப்ராசஸர் கையாள்கிறது.

ரேம் - சாப்ட்வேர் :

ரேம் - சாப்ட்வேர் :

ரேம் :32 ஜிபி உள்ளடக்க சேமிப்புதிறன் கொண்ட 2ஜிபி எல்பிடிடிஆர்3 ரேம் உடன் அதை மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் 128ஜிபி வரையிலாக நீட்டித்தும் கொள்ளலாம்.
இயங்குதளம் : எம்ஐயூஐ-யின் கீழ் இயங்கும் ஆண்ட்ராய்டு 6.0 (மார்ஷ்மெல்லோ)

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பேட்டரி, இணைப்பு மற்றும் பிற அம்சங்கள் :

பேட்டரி, இணைப்பு மற்றும் பிற அம்சங்கள் :

பேட்டரித்திறன் : 4,100எம்ஏஎச்
பிங்கர் பிரிண்ட் அம்சம் : ஆம்
சிம் : ஹைபிரிட் டவுல் சிம் (மைக்ரோ + நானோ/ மைக்ரோ எஸ்டி )
இணைப்பு வசதிகள் : 4ஜி வோல்ட், வைஃபை 802.11 பி/ஜி/என், ப்ளூடூத் 4.1 மற்றும் ஜிபிஎஸ் இணைப்பு ஆப்ஷன்கள்

விலை, கிடைக்கும் தன்மை :

விலை, கிடைக்கும் தன்மை :

இக்கருவியானது ரூ 9,499/-க்கு தங்கம், வெள்ளி மற்றும் சாம்பல் நிற வகைகளில் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 7,500-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடம் கிடைக்கும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

ரெட்மீ 3எஸ் மற்றும் ரெட்மீ 3எஸ் ப்ரைம், அடுத்த ஓப்பன் சேல் எப்போது..?

Best Mobiles in India

English summary
Xiaomi launches Redmi 3S+: things you should know. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X