ரூ.6300ல் சியோமி அறிமுகம் செய்துள்ள புதிய மாடல் ஸ்மார்ட்போன்.!

மிஜியா ஜிம்பல் மாடலில் 5000mAh பேட்டரி திறன் இருப்பதால் சார்ஜ் காலியாகிவிடும் என்ற கவலையே இருக்காது

|

சீனாவின் சியோமி நிறுவனம் தற்போது மிஜியா ஜிம்பல் என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன் ஒன்றை ரூ.6500க்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலில் 5000mAh பேட்டரி திறன் இருப்பதால் சார்ஜ் காலியாகிவிடும் என்ற கவலையே இருக்காது. இந்த மாடல் இப்போதைக்கு சீனாவில் மட்டுமே கிடைக்கும். இந்த மாடலை மி ஸ்டோர் வழியாகவோ அல்லது சியோமி மி இணையதளம் மூலமோ சீனர்கள் வரும் 16ஆம் தேதியில் இருந்து பெற்று கொள்ளலாம்.

ரூ.6300ல் சியோமி அறிமுகம் செய்துள்ள புதிய மாடல் ஸ்மார்ட்போன்.!

ஜிம்பல் மாடல் என்றால் என்ன?
ஜிம்பல் என்றால் வேறு ஒன்றும் இல்லை. இதில் உள்ள கேமிராவை வைத்து ஓடும் ஒரு பொருளையோ அல்லது நாம் நகர்ந்து கொண்டு இருக்க்கும்போதோ எந்தவித பிரச்சனையும் இன்றி தெளிவான வீடியோவை எடுக்கலாம். இதில் உள்ள சிறப்பு வாய்ந்த மோட்டார் வீடியோவை எந்தவித ஷேக்கும் இல்லாமல் படம்பிடிக்க உதவும். கை அசைந்தாலும் வீடியோவில் அசைவு இருக்காது என்பதே ஜிம்பல் மாடல் ஆகும்
ரூ.6300ல் சியோமி அறிமுகம் செய்துள்ள புதிய மாடல் ஸ்மார்ட்போன்.!

3 ஆக்சிஸ் ஜிம்பல் மாடலில் உள்ள வசதிகள்:
மூன்று வித்தியாசமான திசைகளில் இருந்து நிலையாக ஒரு நகரும் பொருளை புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதுதான் 3 ஆக்சஸ் ஜிம்பல். இதில் 5 ஆக்சஸ் ஜிம்பல் கூட உள்ளது. ஆனால் அதன் விலை மிக அதிகமாக இருக்கும்

இந்த மாடலின் முக்கிய சிறப்பு அம்சம் என்று கூறப்படுவது என்னவெனில் இதில் உள்ள 5000mAh பேட்டரி திறன் தான். இதனால் இந்த ஸ்மார்ட்போனை 16 மணி நேரம் எந்தவித பயமும் இன்றி பயன்படுத்தலாம். அதாவது கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தலாம்

ரூ.6300ல் சியோமி அறிமுகம் செய்துள்ள புதிய மாடல் ஸ்மார்ட்போன்.!

சியாமி 3 ஆக்சஸ் ஜிம்பல் மாடலின் ஸ்மார்ட்போன்களின் எடை 200 கிராம் அல்லது அதற்கும் குறைவாக இருப்பதால் எளிதாக எடுத்து செல்லும் வகையில் உள்ளது இன்னொரு சிறப்பு. மேலும் இதன் அகலம் வெறும் 86 மிமீ மட்டும் இருப்பதால் இதனை வைப்பதற்கு மிகக்குறைந்த இடம் இருந்தாலே போதும். இன்றைய நிலையில் பெரும்பாலும் குறைந்த எடையுடனும், அளவில் சிறியதுமான ஸ்மார்ட்போன்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் அதே வகையில் இந்த சியோமி மிஜியா ஜிம்பல் மாடல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.6300ல் சியோமி அறிமுகம் செய்துள்ள புதிய மாடல் ஸ்மார்ட்போன்.!

ஜிம்பல் மாடல் ஸ்மார்ட்போன் துல்லியமான உயர் சென்சார்களை கொண்டது என்பதால் இதன் சேவை 0.03 டிகிரி துல்லியத்துடன் செயல்படுகிறது. ஸ்மார்ட்போன் செயலிகளை இந்த மாடல் எளிதில் கட்டுப்படுத்துவதால் பயனர்களின் நேரம் சேமிக்கப்படுகிறது. அதேபோல் இந்த மாடல் செல்பி பிரியர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஜிம்பல் செயலியை பயன்படுத்தி இந்த மாடல் மூலம் 360 டிகிரி வீடியோவை எளிதில் எடுக்க முடியும்

இதுவரை நாம் பார்க்காத வகையில் சிறந்த டிசைன் மற்றும் அதி நவீன வசதிகள் கொண்ட இந்த ஜிம்பல் ஸ்மார்ட்போன் நிச்சயம் ஒவ்வொருவருக்கும் பிடிக்கும் என்பதோடு இதன் விலை நடுத்தர வர்க்கத்தினர்களையும் திருப்திபடுத்தும். இந்த மாடல் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi launches a 3-axis smartphone gimbal for Rs 6300 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X