Home
Mobile

கொடைவள்ளல் Xiaomi: கம்மி விலைல இப்படி ஒரு போனா? Redmi 12C தாராளமா வாங்கலாம்.!

Xiaomi அதன் துணை பிராண்டான Redmi கீழ் நம்பமுடியாத மலிவு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் Redmi 12C என்று நிறுவனத்தால் அழைக்கப்படுகிறது. இது பிராண்டின் நீண்ட கால பட்ஜெட் சூத்திரத்திற்கு ஏற்றார் போல் அமைந்த பெஸ்ட் மலிவு விலை ஸ்மார்ட்போன் (best budget smartphone) மாடலாகும். இந்த டிவைஸ் மிகவும் குறைந்த விலையில் நல்ல அம்சங்களை பேக் செய்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய Redmi 12C ஸ்மார்ட்போன் சாதனம் மலிவு விலையில் 6.71' இன்ச் கொண்ட பெரிய டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதில் ஒரு பெரிய 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதைச் சக்தியுள்ள ஸ்மார்ட்போனாக மாற்ற, இதில் MediaTek Helio G85 SoC சிப்செட் சேர்க்கப்பட்டுள்ளது. எல்லாம் கலந்து, இந்த Redmi 12C ஒரு டீசெண்டான ஆல்ரவுண்டர் ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கொடைவள்ளல் Xiaomi: கம்மி விலைல இப்படி ஒரு போனா? Redmi 12C வாங்கலாம்.!

இதன் விலை என்ன? இதன் விவரக்குறிப்புகள் என்ன? இது எப்போது வாங்க கிடைக்கும்? இதை நம்பி வாங்கலாமா? வேண்டாமா? என்பது போன்ற முக்கியமான தகவலைத் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். Redmi 12C ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் விபரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்.

Redmi 12C ஆனது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi A1 தொடர் ஸ்மார்ட்போன்களைப் போலவே தோற்றமளிக்கிறது. இது இரண்டு கேமராக்கள், ஒரு LED ஃபிளாஷ் மற்றும் ஒரு கைரேகை சென்சார் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன் மாடலாகும். இந்த சாதனமானது கடினமான வடிவமைப்புடன் வளைந்த பின்புறத்தைக் கொண்டுள்ளது.

முன்பக்கத்தில், மெல்லிய பெசல்கள் மற்றும் V- வடிவ நாட்ச் கொண்ட பிளாட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் (smartphone) சிறப்பம்சங்கள் பற்றிப் பார்க்கையில், இது உயர் தெளிவுத்திறனை கொண்ட 6.71' இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே எல்சிடி டிஸ்பிளே (display) போல் தெரிகிறது. Redmi 12C ஸ்மார்ட்போன் ஆனது MediaTek Helio G85 சிப்செட் (chipset) உடன் பொருத்தப்பட்டுள்ளது.

கொடைவள்ளல் Xiaomi: கம்மி விலைல இப்படி ஒரு போனா? Redmi 12C வாங்கலாம்.!

இந்த டிவைஸ் அதன் ஸ்டோரேஜ் (storage) மற்றும் செயல்பாட்டிற்காக (performance) 4ஜிபி LPDDR4X ரேம் உடன் சேர்க்கப்பட்டுள்ளது. இது eMMC 5.1 ஃபிளாஷ் ஸ்டோரேஜ் உடன் கூடுதல் ஸ்டோரேஜ் அம்சத்தை வழங்குகிறது. கேமரா (camera) அம்சத்திற்கு வரும் போது, இந்த Redmi 12C ஸ்மார்ட்போன் சாதகமானது பின்புறத்தில் 50MP பிரைமரி சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு முன்பக்கத்தில் 5MP ஸ்னாப்பர் உள்ளது.

இது ஒரு 4G ஸ்மார்ட்போன் என்பது கவனிக்கத்தக்கது. இந்த சாதனம் 5000mAh பேட்டரியை (battery) பேக் செய்கிறது. இது 10W சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதில் புளூடூத், வைஃபை மற்றும் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் போன்ற வழக்கமான இணைப்பு விருப்பங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் எடை சுமார் 192 கிராம் மற்றும் சுமார் 8.77 மிமீ தடிமன் கொண்டது. இதன் விலை பற்றிப் பார்க்கையில், இந்த சாதனம் 3 வேரியண்ட் மாடல்களாக வருகிறது.

விலையைப் பற்றி பேசுகையில், Redmi 12C ஸ்மார்ட்போனின் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் விலை 699 யுவான் ஆகும். இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ. 8,357 ($101) ஆகும். இதன் 4GB + 128GB மற்றும் 6GB + 128GB ஸ்டோரேஜ் மாடல்கள் முறையே ரூ. 9,516 ($115) மற்றும் ரூ. 10,757 ($130) என்ற விலையில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது சீனாவின் மெயின்லேண்டில் மட்டுமே வாங்குவதற்குக் கிடைக்கிறது. விரைவில் இது இந்தியா வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Launched New Redmi 12C Smartphone With Helio G85 Under Affordable Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X