54 போன்கள்.. 20% டிஸ்கவுண்ட்.. வயிற்று எரிச்சலை கிளப்பும் Xiaomi ஆபர்.. நாம கொடுத்து வச்சது அவ்ளோ தான்!
அப்போ நாங்கலாம் உனக்கு கஸ்டமரா தெரியலயா? என்று இந்தியாவில் உள்ள ஷாவ்மீ மற்றும் ரெட்மி பயனர்கள் கேட்கும்படியான ஒரு வேலையை பார்த்துள்ளது ஷாவ்மீ நிறுவனம். இந்நிறுவனம் சீனாவில், 2026 ஜனவரி 7 ஆம் தேதி இரவு வரை நடைபெறும் அதன் ஜனவரி சர்வீஸ் வீக் ப்ரோமோஷனை (January Service Week promotion) அறிவித்துள்ளது.
இதன் கீழ் பல்வேறு வகையான ஸ்மார்ட்போன்களுக்கான பேட்டரி மாற்று சேவைகளில் (battery replacement services) 20% தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஷாவ்மீ நிறுவனத்தின் கூற்றுப்படி, மொத்தம் 54 ஷாவ்மீ மற்றும் ரெட்மி மாடல்கள் இந்த தள்ளுபடிக்கு தகுதியுடையவை ஆகும்.

இவற்றில் ஷாவ்மீ 10 சீரீஸ், ஷாவ்மீ 11 சீரீஸ், ஷாவ்மீ 12 சீரீஸ் மற்றும் ஷாவ்மீ 15 சீரீஸ் போன்ற பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களும் அடங்கும். இதேபோல ரெட்மி 12 சீரிஸ், ரெட்மி நோட் 10 சீரீஸ் மற்றும் ரெட்மி கே80 சீரிஸ் ஆகியவைகளும் அடங்கும்.
ஷாவ்மீயின் ஆஃப்டர் சேல்ஸ் டீம் ஆனது, பேட்டரி சிதைவு என்பது சார்ஜ் சுழற்சிகள் குறையும் போது காலப்போக்கில் நிகழும் ஒரு இயல்பான செயல்முறை என்றும், பேட்டரி செயல்திறன் படிப்படியாக குறைந்தால் அதிகமாக கவலைப்பட வேண்டாம் என்றும், உண்மையான பயன்பாட்டின் அடிப்படையில் பேட்டரியை மாற்றுவதை பரிசீலிக்க வேண்டும் என்றும் சீன பயனர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
அதிகப்படியான சார்ஜ், தீவிர வெப்பநிலை அல்லது வெளிப்புற தாக்கத்தால் ஏற்படும் சேதம் போன்ற அசாதாரண சிதைவு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு, ஷாவ்மீ நிறுவனம் அது உடனடியாக சிக்கலைத் தீர்க்க அல்லது தொழில்முறை பழுதுபார்ப்பை நாடவும் பரிந்துரைக்கிறது. சிறந்த பேட்டரி ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கான உதவிக்குறிப்புகளையும் ஷாவ்மீ நிறுவனம் பகிர்ந்து கொண்டது.
மிகவும் வெப்பமான அல்லது குளிர்ந்த சூழல்களில் டிவைஸ்களை சார்ஜ் செய்வதைத் தவிர்க்கவும், பேட்டரி ஆயுளை நீட்டிக்க உதவும் சரியான சார்ஜிங் நடைமுறைகளை பின்பற்றவும் ஷாவ்மீ நிறுவனம் பயனர்களுக்கு அறிவுறுத்தியது. இது எல்லாமே மிகவும் பொதுவான அறிவுரைகள் தான் என்றாலும் கூட, இது சீன பயனர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பொருந்தும்.
இருந்தாலும் கூட "20% டிஸ்கவுண்ட், 54 மாடல்கள்" என்கிற சலுகைகள் எல்லாம் சீனாவிற்கு மட்டுமே கிடைக்கிறது. இது இந்திய வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் வயிற்று எரிச்சலை உண்டாக்கும். பேட்டரி தொடர்பான பல வகையான சிக்கல்களை அதிகம் சந்திக்கும் இந்தியர் வாடிக்கையாளர்களையும் ஷாவ்மீ நிறுவனம் கருத்தில் கொண்டால் - கொஞ்சம் நன்றாக இருக்கும்.
சரி இப்போதைக்கு 2026 இல் இந்தியாவிற்கு என்ன கிடைக்கும்? ஷாவ்மீ 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் தான் கிடைக்கும். ஏனென்றால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஷாவ்மீ 17 சீரிஸில் 3வது மாடல் இருக்கும் என்றும், அது இந்தியாவில் அறிமுகமாகும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
முன்னதாக ஷாவ்மீ 17 சீரீஸின் கீழ் சீனாவில் அறிமுகமான ஷாவ்மீ 17 மற்றும் ஷாவ்மீ 17 அல்ட்ரா ஆகிய 2 மாடல்களும், ஜனவரி 2026 இல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்கிற தகவல்கள் கிடைத்தன. தற்போது ஷாவ்மீ 17 சீரிஸின் கீழ் 3வது மாடலாக ஷாவ்மீ 17டி (Xiaomi 17T) அறிமுகமாகும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. ஷாவ்மீ நிறுவனத்தின் இந்த பிளாக்ஷிப் சீரீஸின் கீழ் 3வது மாடல் இருப்பது உண்மையிலேயே ஒரு நல்ல விஷயமாகும்.
இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வெவ்வெறு பட்ஜெட்களில் வெவ்வேறு அம்சங்களில் கவனம் செலுத்து 3 ஆப்ஷன்கள் இருக்கும். இது குட் நியூஸ் என்றால், பேட் நியூஸ் என்னவென்றால் - ஷாவ்மீ 17, ஷாவ்மீ 17 அல்ட்ரா மாடல்கள் ஜனவரி 2026 இல் அறிமுகம் செய்யப்படாது என்கிற தகவலும் கிடைத்துள்ளது. மாறாக இவைகள் மார்ச் 2026 இல் அறிமுகம் செய்யப்படும் என்றும், 3வது மாடல் ஆன ஷாவ்மீ 17டி ஸ்மார்ட்போன் ஆனது ஏப்ரல் 2026 இல் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








