Home
Mobile

ரெட்மி நோட் 7 ப்ரோ: இன்று முதல் புதிய வேரியண்ட் சலுகையுடன் விற்பனை!

சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களின் அடுத்த விற்பனையை இன்று பிளிப்கார்ட் மற்றும் Mi.com வலைத்தளத்தில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ முதல் நாள் விற்பனையில் அனைத்து யூனிட்களையும் விற்றுத் தீர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனை படைத்த சியோமி

சாதனை படைத்த சியோமி

சியோமி நிறுவனம், சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ அறிமுகம் செய்த முதல் நாள் விற்பனையில் 2,00,000 யூனிட்களை வெறும் சில நொடிகளில் விற்றுத் தீர்த்து சாதனை படைத்தது. ஒரே நாளில் சியோமி போன்கள் விற்பனையானது இதுவே முதல் முறை என்று சியோமி நிறுவனம் தெரிவித்திருந்தது.

இன்று மதியம் முதல் அடுத்த விற்பனை

இன்று மதியம் முதல் அடுத்த விற்பனை

தற்பொழுது அதன் அடுத்த விற்பனையை சியோமி நிறுவனம் இன்று மதியம் 12 மணிக்குத் துவங்குகிறது.பிளிப்கார்ட் வலைத்தளம் மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான Mi.com வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படுமென்று சியோமி அறிவித்துள்ளது.

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ முந்தைய வேரியண்ட்

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ முந்தைய வேரியண்ட்

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் Mi.com தளத்தில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இன் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட் மாடல் வெறும் ரூ.13,999 என்ற விலையிலும், அதன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் மாடல் வெறும் ரூ.16,999 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ரெட்மி நோட் 7 ப்ரோ புதிய வேரியண்ட்

ரெட்மி நோட் 7 ப்ரோ புதிய வேரியண்ட்

சியோமி நேற்று இந்தியச் சந்தையில், புதிய சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ வேரியண்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் படி இன்றைய விற்பனை முதல் சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ வின் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ரேம் கொண்ட புதிய வேரியண்ட் வெறும் ரூ.15,999 என்ற விலையில் இன்று முதல் விற்பனை செய்யப்படும்.

சியோமி சலுகை

சியோமி சலுகை

சியோமி விற்பனையின் பொது வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சலுகை மற்றும் தள்ளுபடியில் வழங்கப்படுவது வழக்கம், அதேபோல் இம்முறையும் சியோமி நிறுவனமா தனது பயனர்களுக்கென்று பல சலுகைகளையும் அறிவித்துள்ளது.

1,120ஜிபி வரையிலான கூடுதல் டேட்டா சலுகை

1,120ஜிபி வரையிலான கூடுதல் டேட்டா சலுகை

இரட்டிப்பு கூடுதல் டேட்டா சேவையுடன் கூடிய கேஷ் பேக் ஜியோ சலுகை, 1,120ஜிபி வரையிலான கூடுதல் டேட்டா சேவை வழங்கும் ஏர்டெல் டபுள் டேட்டா சலுகை, வட்டி இல்லா தவணை மற்றும் ஸெஸ்ட் மனி போன்ற சலுகைகளையும் சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ சிறப்பம்சம்

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ சிறப்பம்சம்

  • 6.3' இன்ச் உடன் கூடிய 2340 x 1080 கொண்ட FHD + டிஸ்பிளே
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 பிரசசர்
  • 4 ஜிபி ரேம் / 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி / 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
  • எஸ்.டி கார்டு மூலம் 256 ஜிபி வரை கூடுதல் மெமரி
  • MIUI 10 உடன் கூடிய ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
  • 48 மெகா பிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் உடன் கூடிய டூயல் ரியர் கேமரா
  • 13 மெகா பிக்சல் செல்ஃபீ கேமரா
  • 4000 எம்.ஏ.எச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Xiaomi launched a new variant of the Redmi Note 7 Pro in Flipkart From Today : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X