இந்தியா: மார்ச் 14-ம் தேதி புதிய சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இந்த சியோமி ரெட்மி 5 ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.
சியோமி நிறுவனம் வரும் மார்ச் 14-ம் தேதி மி டிவி 4ஏ சீரிஸ் ஸமார்ட் டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்பின்பு புதிய ரெட்மி 5 ஸ்மார்ட்போன் மாடலை கண்டிப்பாக மார்ச் 14-ம் அறிமுகப்படுத்தும் சியோமி நிறுவனம். மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். பின்னர் ரெட்மி 5 இரண்டு சேமிப்பு வகைகளில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5 பிளஸ் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் ரெட்மி 5 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி 5:
ரெட்மி 5 ஸ்மார்ட்போன் மாடல் 5.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720 x 1440 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

12எம்பி ரியர் கேமரா:
இந்த சியோமி ரெட்மி 5 ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் ; எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, கைரேகை ஸ்கேனர் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 450 :
சியோமி ரெட்மி 5 ஸ்மார்ட்போனில் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.


விலை:
ரெட்மி 5 பொறுத்தவரை 2ஜிபி மற்றும் 3ஜிபி ரேம் முறையே இதன் விலை ரூ.7,795 மற்றும் ரூ.8,770-எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 3200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications