ஸ்னாப்டிராகன் 425 செயலியுடன் வெளிவரும் ரெட்மி 5ஏ.!
இந்த சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போனில் 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 குவாட்-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.
சியோமி நிறுவனம் புதிய ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் மாடலை இந்திய மொபைல் சந்தையில் வரும் நவம்பர் 30-ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலில் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் மலிவு விலையில் விற்பனைக்கு வருவதால் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

டிஸ்பிளே:
இக்கருவி 5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் 18:9 என்ற திரை விகிதம் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 425:
இந்த சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போனில் 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 குவாட்-கோர் செயலி இடம்பெற்றுள்ளது,
அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

12எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும்
டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
டூயல்-சிம், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications