கோட்நேம் எம்டிஇ2 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த பணியில் சியோமி.!

|

2017-ஆம் ஆண்டின் பாதி வழியில் இருக்கும்போது, வரவிருக்கும் நாட்களில் மேலும் பல அட்டகாசமான ஸ்மார்ட்போனகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படியாக எதிர்பார்க்கப்படும் நிறுவனங்களில் மிகவும் உறுதியான நிலைப்பாட்டில் உள்ள நிறுவனம் தான் - சியோமி. அதாவது நிச்சயமாக மேலும் சில அதிரடியான ஸ்மார்ட்போன்களை சியோமி நிறுவனம் இந்தாண்டுக்குள் வெளியிடும் என்று நம்பலாம்.

சியோமி நிறுவனம் ஏற்கனவே குறிப்பாக இந்தியாவில் பெரும் புகழ் பெற்று வருகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த நாட்களில் சியோமி ஸ்மார்ட்போன்களின் பெரிய தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. நிறுவனம் மிகவும் குறைந்த விலையில் அதே சமயம் அம்சங்கள் மற்றும் உயர் இறுதியில் குறிப்புகள் கொண்ட நிறைய ஸ்மார்ட்போன்களை வழங்குவதே அதற்கு மிக முக்கியமான காரணமாக திகழ்கிறது.

புதிய சியோமி ஸ்மார்ட்போன்

புதிய சியோமி ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனம் இந்த பிரபலத்தன்மையோடு அதன் தயாரிப்புகளை நிறுத்திக் கொள்ளப்போவதில்லை சந்தையில் இன்னும் சில ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்த போகிறது என்பது மிகவும் வெளிப்படையான ஒரு விடயமாகும். அப்படியாக விரைவில் வெளியாகும் என்று நம்பப்படும் புதிய சியோமி ஸ்மார்ட்போனை இங்கே காணலாம்.

எம்டிஇ 2

எம்டிஇ 2

சியோமி நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த புதிய மர்மமான சாதனம் எம்டிஇ 2 (MDE 2) என்ற குறியீட்டு பெயரின் கீழ் தற்போது உள்ளதாகவும் பிரபலமான சீன மைக்ரோ பிளாகிங் தளமான விபோ கூறுகிறது.

மி மிக்ஸ் 2 அல்லது மி நோட் 3

மி மிக்ஸ் 2 அல்லது மி நோட் 3

ஆனால், வெளியாகியுள்ள இந்த சிறிய தகவலில் இருந்து வேறு எந்த விவரங்களையும் பெற முடியவில்லை. எவ்வாறாயினும், ஒரு குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் பெயரைக் கூற இது ஒரு ஆரம்பமாக இருக்கும். அதாவது இது எம்மாதிரியான ஒரு கருவியாக இருக்கும் என்று சில யூகங்களும் கிளம்பியுள்ளன. அதன்படி உள்ள சிறந்த யூகங்களை வைத்து பார்க்கும்போது கூறப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது மி மிக்ஸ் 2 அல்லது மி நோட் 3 ஆக இருக்கலாம்.

முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்

முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்

அறிக்கைகள் சில ஒரு பெஸல்லெஸ் (உளிச்சாயும் குறைவான) டிஸ்ப்ளே போன்ற தொலைபேசியை சுட்டிக் காட்டுவதால் மிகவும் தெளிவான முறையில் இக்கருவி ஒரு மி மிக்ஸ் 2 ஆக இருக்க முடியும் என்பதை கணிக்க முடிகிறது. அது சாத்தியமாக இருப்பின், குறியீட்டு சாதனமான எம்டிஇ 2 முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.

18: 9 விகித டிஸ்பிளே

18: 9 விகித டிஸ்பிளே

மறுபக்கம் இந்த சாதனம் 18: 9 விகித டிஸ்பிளேவை ஆதரிக்கலாம் மற்றும் மியூஐ 9 உடன் வரலாம் என்று பரிந்துரைக்கப்படுவதால் இந்த விகிதத்தை கருத்தில் கொண்டு இக்கருவி மிக் மிக்ஸ் சாதனத்தின் அடுத்த பதிப்பாக இருக்கலாம் என்று நம்ப முடிகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi is working on a new smartphone codenamed MDE 2. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X