சியோமி ஸ்மார்ட்போனில் மிரளவிடும் 50x அல்ட்ரா டெலி ஜூம், 120 ஹாட்ஸ் டிஸ்பிளே, 8K வீடியோ ரெகார்டிங்!

|

சியோமி நிறுவனம் புதிதாக 8K வீடியோவை 30fps இல் பதிவுசெய்யும் ஸ்மார்ட்போன் மடலை சோதனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி கூடுதலாக சியோமி நிறுவனம் சோதனை செய்து வரும் அதன் புதிய ஸ்மார்ட்போன் மாடலில் 120 ஹாட்ஸ் டிஸ்பிளேயும் சோதனை செய்யப்பட்டு வருகிறது என்பது தான்.

சியோமி ஸ்மார்ட்போனில் 50x அல்ட்ரா டெலி ஜூம், 120 ஹாட்ஸ் டிஸ்பிளே, 8K!

சியோமி நிறுவனம், ஸ்மார்ட்போன் சந்தையில் பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. தற்பொழுது அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடிவு செய்துள்ள சியோமி நிறுவனம் முதல் முறையாக 120 ஹாட்ஸ் டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன் மாடலை தயார் செய்து வருகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சியோமி ஸ்மார்ட்போனில் 50x அல்ட்ரா டெலி ஜூம், 120 ஹாட்ஸ் டிஸ்பிளே, 8K!

அண்மையில் தான் MIUI 11 பீட்டா வெர்ஷன் ஐம்முகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் இல் சியோமி நிறுவனத்தின் 120 ஹாட்ஸ் டிஸ்பிளே ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த 120 ஹாட்ஸ் டிஸ்பிளே அசுஸ் ராக் போன் மற்றும் ரேசர் போன்களில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி ஸ்மார்ட்போனில் 50x அல்ட்ரா டெலி ஜூம், 120 ஹாட்ஸ் டிஸ்பிளே, 8K!

இத்துடன் இன்னும் கூடுதலாக அல்ட்ரா டெலிபோட்டோ சேவைக்கான பிரத்தியேக கேமரா சேவையிலும் சியோமி நிறுவனம் புதிய முயற்சியை மேற்கொள்ளவுள்ளது. இதுவரை டெலிபோட்டோ சேவையில் 5X ஜூம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது சியோமி நிறுவனம் 50x ஜூம் சேவையை சோதனை செய்து வருவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சியோமி ஸ்மார்ட்போனில் 50x அல்ட்ரா டெலி ஜூம், 120 ஹாட்ஸ் டிஸ்பிளே, 8K!

மிக விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பற்றிய பெயர் விபரம், சிறப்பம்சம் மற்றும் கூடுதல் தகவல்களை சியோமி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi is Working On 50x Ultra Zoom, 120 Hertz Display, 8K Video Recording : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X