64 மெகா பிக்சல் கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்!
இந்தியச் சந்தையில் பட்ஜெட் விலையில் 48 மெகா பிக்சல் கேமராவான ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனை சியோமி அறிமுகம் செய்தது.அதேபோல் அடுத்தபடியாக 64 மெகா பிக்சல் கொண்ட ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் இந்த ஆண்டில் ஏகப்பட்ட ஸ்மார்ட்போன்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்திருந்தது. முக்கியமாக சியோமி ரெட்மி அறிமுகம் செய்த ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

சியோமி ரெட்மி 2019
சியோமி ரெட்மி 2019 ஆம் ஆண்டின் துவக்கத்தில் ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து ரெட்மி 7, ரெட்மி 7A, ரெட்மி Y3, ரெட்மி 7S, ரெட்மி GO, ரெட்மி K மற்றும் ரெட்மி K ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் படுத்தியுள்ளது.

64 மெகா பிக்சில் கேமரா
சென்ற வரம் இந்தியச் சந்தையில் ரெட்மி K மற்றும் ரெட்மி K ப்ரோ ஸ்மார்ட்போன்களை சியோமி அறிமுகம் செய்தது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விற்பனை இன்று முதல் துவங்கியுள்ளது. அடுத்தபடியாக சியோமி அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போனில் 64 மெகா பிக்சில் கேமரா வழங்கப்படும் என்று தகவல் கசிந்துள்ளது.

சாம்பிள் புகைப்படங்கள்
ரெட்மியின் பொது மேலாளர், லு வெய்பிங் தனது வலைத்தளத்தில் சியோமி அடுத்து அறிமுகம் செய்யவிருக்கும் போனில் 64 மெகா பிக்சில் கேமரா இருக்கும் என்று பதிவிட்டு, 64 மெகா பிக்சல் கேமராவில் படம்பிடிக்கப்பட்ட புகைப்படங்களையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.

ஷியோமி வி.ஐ.பி. பதிவிட்ட பதிவு
அதேபோல் திங்களன்று, ஷியோமி வி.ஐ.பி. மற்றும் இந்தியா நிர்வாக இயக்குனர், மனு குமார் ஜெயின், அவரின் டிவிட்டர் பக்கத்தில் ரெட்மி 64 மெகா பிக்சல் கேமராவில் படம்பிடிக்கப்பட்ட புகைப்படங்களைச் சேர்த்துப் பதிவிட்டிருக்கிறார். அடுத்த வரவிருக்கும் போனில் இந்த 64 மெகா பிக்சல் கேமரா இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று உறுதியாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

விரைவில் ரெட்மி 8 மற்றும் ரெட்மி 8 ப்ரோ
இந்தியச் சந்தையில் சியோமி ரெட்மி நிறுவனம், கண்டிப்பாக ரெட்மி 8 மற்றும் ரெட்மி 8 ப்ரோ போன்களை அறிமுகம் செய்யுமென்று முன்பே தகவல்கள் கசிந்திருந்தது. தற்பொழுது கிடைத்துள்ள கூடுதல் தகவலின்படி ரெட்மி நோட் 8 ப்ரோ நிச்சயம் 64 மெகா பிக்சல் கேமராவுடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications