அடுத்த மாடலில் 108Mp கேமரா: ரெட்மி நோட் 9 தொடரில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள்?

|

ரெட்மி நோட் 9 தொடரில் அடுத்ததாக மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 108 எம்பி முதன்மை கேமரா இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மூன்று மாடல் ஸ்மார்ட்போன்கள்

மூன்று மாடல் ஸ்மார்ட்போன்கள்

ரெட்மி நோட் 9 தொடரில் அடுத்ததாக மூன்று மாடல் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரெட்மி நோட் 10 சீரிஸில் அடுத்த அறிமுகம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிறுவனத்தின் முடிவு வேறுமாதிரியாக இருப்பதாக தெரிகிறது.

ரெட்மி நோட் 9 தொடரில் அறிமுகமாக வாய்ப்பு

ரெட்மி நோட் 9 தொடரில் அறிமுகமாக வாய்ப்பு

ரெட்மி நோட் 9 தொடரின் கீழ் மூன்று ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியானாலும் அதன் அழைப்பு விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இந்த தகவல் வெய்போ மூலமாக டிஜிட்டல் சேட் ஸ்டேஷன் எனப்படும் சீன தகவல் கசிவில் இருந்து தெரியவந்துள்ளது.

டிப்ஸ்டர் வெளியிட்டுள்ள அறிக்கை

டிப்ஸ்டர் வெளியிட்டுள்ள அறிக்கை

டிப்ஸ்டர் வெளியிட்டுள்ள தகவலின்படி ரெட்மி நோட் 9 தொடரில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்கள் இடைநிலை மாடலாக இருக்க வாய்ப்பிருக்கிறது. ஸ்மார்ட்போன் பெயர் விவரங்கள் வெளியாகவில்லை என்றாலும் இது நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த மூன்று ஸ்மார்ட்போன்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை.

108 மெகாபிக்சல் முதன்மை கேமரா

108 மெகாபிக்சல் முதன்மை கேமரா

டிப்ஸ்டர் அறிக்கையின் படி இதில் 108 மெகாபிக்சல் கொண்ட முதன்மை கேமரா இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அதோடு சாம்சங் ஐசோசெல் சென்சார் முதன்மை கேமராவில் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் எங்கு வெளியிடப்படும் எப்போது வெளியாகும் என்ற தகவல்கள் எதுவும் இல்லை.

Airtel வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: Jio-வுக்கு போட்டியாக Airtel வழங்கும் இலவச சலுகை!Airtel வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: Jio-வுக்கு போட்டியாக Airtel வழங்கும் இலவச சலுகை!

டிஸ்ப்ளே, பேட்டரி குறித்த விவரங்கள் வெளியாகவில்லை

டிஸ்ப்ளே, பேட்டரி குறித்த விவரங்கள் வெளியாகவில்லை

ரெட்மி நோட் 9 தொடர் பட்ஜெட் பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதில் 108 எம்பி கேமரா இடம்பெறுமா என்றால் அது சந்தேகம்தான். இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே, பேட்டரி குறித்த எந்த விவரங்களும் வெளியாகவில்லை.

ரெட்மி நோட் 10 சீரிஸ்

ரெட்மி நோட் 10 சீரிஸ்

ரெட்மி நோட் 9 தொடரில் தற்போது ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கப்படுவதால் ரெட்மி நோட் 10 சீரிஸ்-ல் அடுத்தடுத்த மாடல்கள் வெளியாவது நிச்சயமற்றதாக இருக்கிறது. ரெட்மி நோட் 9 தொடரில் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே வடிவமைப்பு இருப்பது வழக்கம்.

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு

ரெட்மி நோட் தொடர் பொதுவாகவே முழு எச்டி ப்ளஸ் எல்சிடி பேனலுடன் வருகிறது. அதேபோல் வேகமான சார்ஜிங் இதில் இருக்கும். பேட்டரி எம்ஏஎச் பவர் அதிகமாகவே இருக்கும். ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்களில் ரெட்மி நோட் 9 ப்ரோ, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் மலிவு விலையில் அதிக அம்சங்கள் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டதால் இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

File Images

Best Mobiles in India

English summary
Xiaomi is likely to launch the next three smartphones in the Redmi Note 9 series

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X