விலை இதுவா இருந்தா வரவேற்பு அமோகமா இருக்கும்: ரெட்மி 9 டீசர்!
சியோமி நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் ஸ்மார்ட்போனாக ரெட்மி 9 விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதை உணர்த்தும் வகையில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன்
ரெட்மி 9 ப்ரைம் இந்தியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் சியோமி நிறுவனம் தனது அடுத்த பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன் அறிமுகம் குறித்த டீசரை வெளியிட்டுள்ளது.

ரெட்மி 9 ஏ அல்லது ரெட்மி 9 சி
இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி 9 ஏ அல்லது ரெட்மி 9 சி-ன் மறுபெயரிட்ட பதிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி இந்திய தலைவர் மனு குமார் ஜெயில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் ஸ்மார்ட்போன் குறித்து சரியாக வெளியடப்படவில்லை.

ரெட்மி 9 பிரிவின் கீழ்
இருப்பினும் வரவிருக்கும் ஸ்மார்ட்போனானது ரெட்மி 9 பிரிவின் கீழ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம். சியோமி நிறுவனம் அடுத்தடுத்து ரெட்மி 9 பிரிவு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. குறிப்பாக ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் தொடர்ந்து அறிவிக்கப்படும் அத்தனை விற்பனை தேதியும் ஆரம்பமான சில நிமிடங்களிலேயே புக்கிங் முடிந்துவிடுகிறது.
ரெட்மி 9 ப்ரைம் ஸ்மார்ட்போன்
அதேபோல் ரெட்மி 9 ப்ரைம் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அதேபோல் ரெட்மி 9ஏ மற்றும் ரெட்மி 9 சி மாடலை நிறுவனம் மலேசியாவில் ஜூன் மாதம் அறிமுகம் செய்தது. நேற்று(புதன் கிழமை) சியோமி இந்திய தலைவர் ரெட்மி 9 அறிமுகம் குறித்து டுவீட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

எப்போது அறிமுகமென தெரியவில்லை
டீசரின்படி ரெட்மி 9 எப்போது அறிமுகப்படுத்தப்படும் என தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி
ரெட்மி 9 மாடல் ரெட்மி 9 ஏ ரெட்மி 9சி மாடலின் மறுபெயரிட்ட பதிப்பாக இருக்கலாம் என கருதப்படுவதால் அதன் அம்சங்களை சற்று ஆராய்ந்து பார்க்கலாம். இந்த இரண்டு மாடல்களும் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. ரெட்மி 9 ஏ 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதியோடு தோராயமாக இந்திய விலைப்படி ரூ.6,300-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனானது மிட்நைட் க்ரே, மயில் பச்சை போன்ற வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.

ரூ.7500-க்கு விற்பனை
இதன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக ரெட்மி 9 கருதப்பட்டாலும் இந்திய அறிமுகத்திற்கு முன்பு இதன் ரேம் மற்றும் சேமிப்பு வசதி ஜிபியை அதிகரிக்கலாம். அதேபோல் ரெட்மி 9சி 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி தோராயமாக ரூ.7500-க்கு விலை நிர்ணயிக்கப்பட்டது.

ஆண்ட்ராய்டு 10 ஆதரவு
ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான MIUI 11, 6.53 இன்ச் எச்டி + (720x1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளே மற்றும் இரட்டை சிம் ஆதரவுடன் இருக்கிறது. அதேபோல் ரெட்மி 9 சி மீடியா டெக் ஹீலியோ ஜி35 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ரெட்மி 9 ஏ மீடியா டெக் ஹீலியோ ஜி 25 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

ரூ.10,000 பிரிவில் அறிமுகம் செய்யப்படலாம்
ரெட்மி 9 சி பின்புறத்தில் இரண்டு கேமராக்களும் ரெட்மி 9 ஏ ஒரு கேமராவையும் கொண்டுள்ளது. இரண்டு தொலைபேசிகளிலும் 5 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது. மேலும் ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 5,000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி உள்ளது. எப்படி பார்த்தாலம் ரெட்மி 9 இந்தியாவில் ரூ.10,000 பிரிவில் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications