டிவி உட்பட சியோமி சாதனங்களுக்கு அதிரடி விலை உயர்வு.!
மி டிவி 4ஏ ப்ரோ (49-இன்ச்) சாதனத்தின் முந்தய விலை ரூ.29,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.2000 அதிகரித்து ரூ.31,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சியோமி நிறுவனம் தற்சமயம் அதன் சாதனங்களுக்கு அதிரடி விலை உயர்வை அறிவித்துள்ளது, அதன்படி இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் தரமான ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவி, பவர் பேங் உட்டப பல சாதனங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வந்தது.

மேலும் சியோமி நிறுவனம் அறிமுகம் செய்த ஸ்மார்ட் டிவிகள் அனைத்தும் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் இந்தியாவில் சியோமி சாதனங்களுக்கு விலை அதிகரிப்பது சற்று வருத்தத்தை ஏற்படுத்தும் விதமாக தான் உள்ளது.

சியோமி ரெட்மி 6:
சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் ரூ.500 அதிகரித்து 8,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.7,999-ஆக உள்ளது.

சியோமி ரெட்மி 6ஏ:(16ஜிபி)
சியோமி ரெட்மி 6ஏ(16ஜிபி) ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.600 அதிகரித்து ரூ.6,599 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி ரெட்மி 6ஏ:(32ஜிபி)
சியோமி ரெட்மி 6ஏ(32ஜிபி) ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.500 அதிகரித்து ரூ.7,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மி டிவி 4ஏ ப்ரோ:(49-இன்ச்)
மி டிவி 4ஏ ப்ரோ (49-இன்ச்) சாதனத்தின் முந்தய விலை ரூ.29,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.2000 அதிகரித்து ரூ.31,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மி டிவி 4சி ப்ரோ: (32-இன்ச்)
மி டிவி 4சி ப்ரோ: (32-இன்ச்) சாதனத்தின் முந்தய விலை ரூ.14,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.1000 அதிகரித்து ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மி பவர் பேங்க் 2ஐ(10000எம்ஏஎச்):
மி பவர் பேங்க் 2ஐ(10000எம்ஏஎச்) சாதனத்திற்கு ரூ.100 வரை விலை உயர்வுடன் ரூ.899-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் முந்தைய விலை ரூ.799-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications