நவம்பர் 22: பட்ஜெட் விலையில் சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ அறிமுகம்.!
சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.26-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
இந்திய சந்தையில் தொடர்ந்து புதிய தொழிலநுட்பங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது சியோமி நிறுவனம். மேலும் இந்நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அது என்னவென்றால்
வரும் நவம்பர் 22-ம் தேதி மிகவும் எதிர்பார்த்த சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் பல்வேறு முக்கிய அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:
சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.26-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு2280 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 636:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 1.8ஜிகதஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:
சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:
சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ சாதனத்தில் 12எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதேபோன்று 20எம்பி+2எம்பி டூயல் செல்பீ மற்றும் ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:
இக்கருவி கருப்பு, நீலம், சிவப்பு, ரோஸ் போன்ற நிறங்களில் கிடைக்கும், பின்பு வைஃபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, ஜிபிஎஸ், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும்
பேஸ் அன்லாக் அம்சத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

விலை:
சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.14,999-ஆக உள்ளது, பின்பு வரும் நவம்பர் 23-ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications