புது போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. சியோமி Mi 10i ஜனவரியில் அறிமுகம்..

|

சியோமி நிறுவனம் இந்தியாவில் வரும் ஜனவரி 5 ஆம் தேதி Mi 10i சாதனத்தை அறிமுகம் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் வருகைக்காக சியோமி ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்துக்கிடக்கின்றனர் என்பதே உண்மை. இதற்கான காரணம் என்னவென்றால் இந்த ஸ்மார்ட்போன் 108 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமராவுடன் அறிமுகம் செய்யப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் Mi10i

புதிய ஸ்மார்ட்போன் Mi10i

கடந்த கசிவுகள் மூலம், இந்த புதிய ஸ்மார்ட்போன் Mi10i ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அசல் மாடல் பெயரை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இந்த போன் 108 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மூலம் சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நோட் 9 புரோ 5 ஜி ஆக இருக்கக்கூடும் என்று சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி நோட் 9 ப்ரோ மாடலை விட சீனா 5 ஜி மாடல் வேறுபட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

08 மெகாபிக்சல் பிரைமரி கேமரா

08 மெகாபிக்சல் பிரைமரி கேமரா

சியோமி தனது வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை ட்விட்டரில் அறிவித்துள்ளது. ட்வீட் இல் இது Mi 10i ஆக இருக்கும் என்று வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், குறுகிய டீஸர் வீடியோ இது சதுர வடிவ குவாட் பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. அதேபோல், இது 108 மெகாபிக்சல் பிரைமரி கேமராவுடன் வருகிறது என்பதையும் வீடியோ சொல்லாமல் சொல்கிறது. உன்னிப்பாகக் கவனித்தால் விஷயம் புரியும்.

அடடே இது தெரியாம போச்சே.! 'டூ நாட் டிஸ்டர்ப்' மோடில் இவ்வளவு பயன் இருக்கா..?அடடே இது தெரியாம போச்சே.! 'டூ நாட் டிஸ்டர்ப்' மோடில் இவ்வளவு பயன் இருக்கா..?

Mi 10 சீரிஸ் வரிசையில் புதிய போன்

Mi 10 சீரிஸ் வரிசையில் புதிய போன்

Mi 10i என்பது Mi 10 சீரிஸின் கீழ் சேர்க்கப்படும், இதில் இதுவரை Mi 10, Mi 10 Pro, Mi 10 Lite, Mi 10 Ultra மற்றும் Mi 10 Lite Zoom Edition ஆகிய ஸ்மார்ட்போன்கள் அடங்கும். Mi 10i சமீபத்தில் மாடல் எண் M2007J17I உடன் கீக்பெஞ்சில் காணப்பட்டது. கீக்பெஞ்ச் இணையதளத்தில், இது 8 ஜிபி ரேம் மற்றும் ஒரு ஆக்டா கோர் சிப்செட் உடன் சிங்கிள் கோர் மதிப்பெண்ணாக 652 மற்றும் மல்டி கோர் மதிப்பெண்ணாக 2,004 என்ற மதிப்பெண்களை ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது.

Mi 10i எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

Mi 10i எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

சீனாவில் கடந்த மாதம் வெளியான Redmi நோட் 9 ப்ரோ 5G போனின் மாற்றப்பட்ட மாதிரியாக மி 10i இருக்கலாம் என்று சமீபத்திய அறிக்கை கூறுகிறது. Mi 10i ஆனது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.67' இன்ச் முழு எச்டி (2,400x1,080 பிக்சல்கள்) டிஸ்பிளேவைக் கொண்டிருக்கலாம் என்றும், மேலும் இது 6 ஜிபி ரேம் உடன் ஜோடியாக ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட் உடன் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi India confirms Mi 10i Launch on January 5 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X