Amazon-ல் அள்ளும் ஆர்டர்கள்.. ரூ.7,689 போதும்.. 1 இல்ல 2 இல்ல.. 6 Redmi போன்கள் மீது அமோக தள்ளுபடி!
சீன நிறுவனமான ஷாவ்மீ, இந்திய சந்தைக்குள் நுழைந்து 10 ஆண்டுகள் ஆகின்றது. இந்நிகழ்வை கொண்டாடும் வகையால் ஷாவ்மீ இந்தியா (Xiaomi India ) நிறுவனமானது கடந்த ஜூலை 9 ஆம் தேதியன்று, பல்வேறு வகையான புதிய தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அந்நிகழ்வின் ஹை-லைட் ஆக.. முக்கிய அறிமுகமாக ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G) ஸ்மார்ட்போன் இருந்தது. இதனுடன் சேர்த்து ரெட்மி பட்ஸ் 5சி (Redmi Buds 5C) இயர்பட்ஸ் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது.
கூடுதலாக ஷாவ்மீ பிராண்டிங்கின் கீழ் ஷாவ்மீ பாக்கெட் பவர் பேங்க் 1000எம்ஏஎச் (Xiaomi Pocket Power Bank 10000mAh), ஷாவ்மீ பவர் பேங்க் 4ஐ 10000எம்ஏஎச் (Xiaomi Power Bank 4i 10000mAh) மற்றும் ஹாவ்மீ ரோபோ வாக்யூம் கிளீனர் எக்ஸ்10 (Xiaomi Robot Vacuum Cleaner X10) ஆகியவைகளும் அறிமுகம் செய்யப்பட்டன.

புதிய அறிமுகங்களோடு ஷாவ்மீயின் இந்த 10 ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம் முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம். இதை இன்னும் ஸ்பெஷலாக மாற்றும் நோக்கத்தின் கீழ்.. அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கான சிறப்பு சலுகை விலை விற்பனை ஒன்றும் நடக்கிறது. இதன் கீழ் பல்வேறு ரெட்மி ஸ்மார்ட்போன்களின் மீது பிரத்யேக விலைக்குறைப்பு, தள்ளுபடி மற்றும் சலுகைகள் அணுக கிடைக்கிறது.
1. ரெட்மி 12சி 5ஜி (Redmi 13C 5G): தற்போது அமேசான் இந்தியா வலைதளத்தில், இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் 25% தள்ளுபடியை பெற்று ரூ.13,999 க்கு பதிலாக ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கிறது.

2. ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G): தற்போது அமேசான் இந்தியா வலைதளத்தில், இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் 31% தள்ளுபடியை பெற்று ரூ.17,999 க்கு பதிலாக ரூ.12,499 க்கு வாங்க கிடைக்கிறது.
3. ரெட்மி 13சி (Redmi 13C): தற்போது அமேசான் இந்தியா வலைதளத்தில், இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 36% என்கிற நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.11,999 க்கு பதிலாக ரூ.7,689 க்கு வாங்க கிடைக்கிறது.
4. ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G): தற்போது அமேசான் இந்தியா வலைதளத்தில், இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் 25% தள்ளுபடியை பெற்று ரூ.15,999 க்கு பதிலாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது.
5. ரெட்மி நோட் 12 5ஜி (Redmi Note 12 5G): தற்போது அமேசான் இந்தியா வலைதளத்தில், இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் 35% தள்ளுபடியை பெற்று ரூ.19,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது.
6. ரெட்மி 10ஏ (Redmi 10A): தற்போது அமேசான் இந்தியா வலைதளத்தில், இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 33% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.11,999 க்கு பதிலாக ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது.
மேற்கண்ட பழைய ரெட்மி மாடல்களை வாங்குவதில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால்.. புதிதாக அறிமுகமான ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனை கருத்தில் கொள்ளலாம் . இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி + 128ஜிபி ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.13,999 க்கும், 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.15,499 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் இந்தியா வழியாக ஜூலை 12 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








