சுதந்திர தின சிறப்பு விற்பனை : சியோமி ஸ்மார்ட்போன்களை அள்ளிக்கோங்க.! மி.காம்.!

|

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவங்கள் வழங்கும் சுதந்திர தின சிறப்பு விற்பனை வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் என்ற அறிவித்து இருந்தது. இந்நிலையில் சியோமி நிறுவனமும் தனியாக மி.காம் வலைதளம் மூலம் சுதந்திர தின சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 11-ம் தேதி வரை

ஆகஸ்ட் 11-ம் தேதி வரை

அதன்படி சியோமி நிறுவனத்தின் இந்த சிறப்பு விற்பனை இன்று மதியம் 12மணி முதல் தொடங்கி வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி 7:

சியோமி ரெட்மி 7:

சியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.500-வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி 2ஜிபி ரேம்
கொண்ட ரெட்மி 7 ஸ்மார்ட்போனை ரூ.7,499-விலையில் வாங்க முடியும். பின்பு 3ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 7 ஸ்மார்ட்போனை 8,499-விலையில் வாங்க முடியும்.

மலிவு விலையில் சியோமி நிறுவனத்தின் 20000எம்ஏஎச் பவர் பேங்க் அறிமுகம்.!மலிவு விலையில் சியோமி நிறுவனத்தின் 20000எம்ஏஎச் பவர் பேங்க் அறிமுகம்.!

சியோமி ரெட்மி நோட் 7எஸ்:

சியோமி ரெட்மி நோட் 7எஸ்:

சியோமி நிறுவனத்தின ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000-வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, அதன்படி 3ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனை ரூ.9,999 விலையில் வாங்க முடியும். பின்பு 4ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 7எஸ் மாடலை ரூ.11,999-விலையில் வாங்க முடியும்.

வைரல் வீடியோ: சிறையிலிருந்து தப்ப மகள் போல வேடமிட்ட பலே திருடன்..!வைரல் வீடியோ: சிறையிலிருந்து தப்ப மகள் போல வேடமிட்ட பலே திருடன்..!

ரெட்மி வ்யை3:

ரெட்மி வ்யை3:

சியோமி நிறுவனத்தின் 3ஜிபி ரேம் கொண்ட ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு 4ஜிபி ரேம் கொண்ட ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில்
கிடைக்கும்.

ரெட்மி நோட்6 ப்ரோ:

ரெட்மி நோட்6 ப்ரோ:

சியோமி ரெட்மி நோட்6 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.12,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு ரெட்மி வ்யை2 ஸ்மார்ட்பேரின் முந்தைய விலை ரூ.10,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.7,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய மாறுபாடுகளுடன் களமிறங்கும் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன்.!புதிய மாறுபாடுகளுடன் களமிறங்கும் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன்.!

சியோமி மி ஏ2:

சியோமி மி ஏ2:

சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் ஆனது எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பை சேர்த்து ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் விலைகுறைக்ப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ரெட்மி 6(3ஜிபி ரேம்)- விலை ரூ.6,999/-
ரெட்மி 6 ப்ரோ(4ஜிபி ரேம்)- விலை ரூ.9,999/-
ரெட்மி 6ஏ (2ஜிபி ரேம்)-விலை ரூ.5,999/-

Best Mobiles in India

English summary
xiaomi-independence-day-sale-india-mi-com-amazon-flipkart-discounts-offers-deals : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X