சீனாக்காரன் செஞ்சி விட்டான்.. 6100mAh பேட்டரி, 50W வயர்லெஸ் சார்ஜிங், Leica கேமரா.. புதிய Xiaomi போன்!
வருகிற மே 22 ஆம் தேதி அன்று சீனாவில் நடக்கும் ஒரு பெரிய வெளியீட்டு நிகழ்வில், ஷாவ்மீ (Xiaomi) நிறுவனத்தின் முதல் எஸ்யுவி (SUV) ஆன ஷாவ்மீ யு7 (Xiaomi YU7) உட்பட பல புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நிகழ்வில் ஷாவ்மீ 15எஸ் ப்ரோ (Xiaomi 15S Pro) என்கிற புதிய ஸ்மார்ட்போனு மற்றும் ஷாவ்மீ பேட் 7 அல்ட்ரா (Xiaomi Pad 7 Ultra) என்கிற புதிய டேப்லெட்டும் அறிமுகமாகும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்விரு தயாரிப்புகளுமே 3என்எம் செயல்பாட்டில் கட்டமைக்கப்பட்ட, ஷாவ்மீ நிறுவனத்தால் சுயமாக உருவாக்கப்பட்ட இன்-ஹவுஸ் ஸ்ரிங் ஓ1 சிப்செட் உடன் வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது ஷாவ்மீ 15எஸ் ப்ரோ ஆனது நிறுவனத்தின் ஸ்ரிங் ஓ1 சிப்செட்டை கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது LTPO 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் ரீடர் உடனான 6.73-இன்ச் 2கே குவாட்-கர்வ்டு ஸ்க்ரீனை கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6100mAh பேட்டரியை கொண்டிருக்கலாம் மற்றும் 90W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கலாம். கேமராக்களை பொறுத்தவரை இது 50 மெகாபிக்சல் சென்சார்கள் மற்றும் 10எக்ஸ் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் கொண்ட லைக்கா-பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம்
மே 22 அன்று நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் ஷாவ்மீ பேட் 7 அல்ட்ரா ஃபிளாக்ஷிப் டேப்லெட்டும் அறிமுகமாகும். இந்த டேப்லெட் 14-இன்ச் OLED பேனலை கொண்டிருக்கும் என்றும், இது மிகவும் ஸ்லிம் ஆன பெஸல்கள் மற்றும் 3டி பேஸ் ரிக்கனைசேஷன் ஆதரிக்கும் ஒரு நாட்ச் ஆகியவற்றை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த டேப்லெட் 120W சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாவ்மீ 15எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா? இது குறித்து எந்த விவரங்களும் இல்லை. இருப்பினும் ஷாவ்மீ 15 சீரீஸின் கீழ் உள்ள ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால், ஷாவ்மீ 15எஸ் ப்ரோ மாடல் இந்திய சந்தைக்கு வர சில வாய்ப்புகள் உள்ளன. அப்படி வந்தால் இது ரூ.75,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் வரலாம். நினைவூட்டும் வண்ணம் கடந்த 2025 இல் ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,09,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது.
ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.73-இன்ச் WQHD+ LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்
- 16ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 ஓ அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2.0 (HyperOS 2.0)
- லைக்கா டியூன் செய்யப்பட்ட குவாட் ரியர் கேமரா யூனிட்
- 50-மெகாபிக்சல் ப்ரைமரி LYT-900 சென்சார் (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்)
- 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- OIS மற்றும் 3x வரை ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் சோனி IMX858 டெலிஃபோட்டோ கேமரா
- OIS மற்றும் 4.3x வரை ஆப்டிகல் ஜூம் கொண்ட 200-மெகாபிக்சல் ISOCELL HP9 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார்
- 90W வயர்டு மற்றும் 80W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 5410mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 5ஜி, 4ஜி LTE, வைஃபை 7, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, யூஎஸ்பி 3.2 டைப்-சி போர்ட்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்.


Click it and Unblock the Notifications








