அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு எதிராக சியோமி புகார்.. காரணம் என்ன தெரியுமா?

|

அமெரிக்க அரசாங்கம் கடந்த மாதம் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியாவோமி நிறுவனத்திற்கும் சீன இராணுவத்திற்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டு, 8 சீன நிறுவனங்களுடன் பட்டியலிடப்பட்டு தடை செய்யப் பரிந்துரைக்கப்பட்டது. இப்போது அமெரிக்க பாதுகாப்பு மற்றும் கருவூலத் துறைகளுக்கு எதிராக சியோமி நிறுவனம் வாஷிங்டன் மாவட்ட நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளது.

தீர்ப்பு சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது

தீர்ப்பு சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது

இந்த தீர்ப்பு "சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது" என்று சியோமி குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனம் சீன இராணுவத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த முதலீட்டுக் கட்டுப்பாடுகள், சியோமிக்கு ஈடுசெய்ய முடியாத தீங்கு விளைவிக்கும் என்று நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்

டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்

இந்த அசல் முடிவை அமெரிக்காவின் முந்தைய பிரதமர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் மூலம் பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிளாக் லிஸ்ட் பட்டியலில் சேர்க்கப்பட்ட பின்னர், அமெரிக்க முதலீட்டாளர்கள் இப்போது சியோமியின் பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளனர், மேலும் நவம்பர் 11, 2021-க்குள் அவர்களிடம் இருக்கும் பங்குகளின் இருப்புக்களை விலக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இனி 'இந்த' ATM இயந்திரங்களில் பணம் எடுக்க தடை.. குழப்பத்திலும், கடுப்பிலும் வாடிக்கையாளர்கள்..இனி 'இந்த' ATM இயந்திரங்களில் பணம் எடுக்க தடை.. குழப்பத்திலும், கடுப்பிலும் வாடிக்கையாளர்கள்..

சியோமியின் 75% உரிமைகள்

சியோமியின் 75% உரிமைகள்

சியோமி நிறுவனத்தின் வாக்களிக்கும் உரிமைகளில் 75%, உறுதியான கட்டமைப்பின் கீழ் உள்ளது, இணை நிறுவனர்களான லின் பின் மற்றும் லீ ஜுன் ஆகியோரால் இந்த பங்குகள் வைத்திருப்பதாக சியோமி கூறியுள்ளது. அதேபோல், இராணுவத்துடன் இணைந்த ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்திடமிருந்து எந்த உரிமையும் நிறுவனம் வைத்திருக்கவில்லை என்றும் கூறியுள்ளது.

முதல் பத்து பேரில் மூன்று பேர் அமெரிக்கர்கள்

முதல் பத்து பேரில் மூன்று பேர் அமெரிக்கர்கள்

அதன் பங்குதாரர்களில் "கணிசமான எண்ணிக்கையிலானவர்கள்" அமெரிக்க நபர்கள் என்றும், சாதாரண பங்குகளை வைத்திருக்கும் முதல் பத்து பேரில் மூன்று பேர் அமெரிக்க நிறுவன முதலீட்டுக் குழுக்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது . அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களமும் கருவூலத் துறையும் சியோமி கருத்துக் கோரியதற்கு உடனடியாக எந்தவித பதிலையும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Xiaomi files a complaint against the US Department of Defense for Blacklisting them : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X