Just In
- 16 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 19 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 19 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 20 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Movies
சூர்யா 42 படத்தின் தலைப்பு இதுதானா.. ஒர்க்அவுட் ஆகுமா ‘வி’ சென்டிமெண்ட்!
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
6ஜிபி ரேம்; 12எம்பி+20எம்பி கேம் உடன் ஐபோன் எக்ஸ்-ஐ மிரட்டும் மி 7.!
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் மிட்-ரேன்ஜ் மற்றும் பட்ஜெட் பிரிவுகளை வெளிப்படையாக ஆட்சி செய்யும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, அடுத்த மாதம் நிகழும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வில் அதன் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது.

வெளியான பெரும்பாலான கணிப்புகள் மிகச்சரியெனில், அது - சியோமி மி7 ஸ்மார்ட்போனாக இருக்கலாம். எம்டபுள்யூசி2018 நிகழ்வின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் எக்ஸ்போவின் காட்சியாளர்களில் ஒன்றாக சியோமி நிறுவனத்தின் பெயர் ஏற்கனேவே பட்டியலிடப்பட்டுள்ள நிலைப்பாட்டில், வெளியாகப்போவது என்ன ஸ்மார்ட்போன் என்பது மட்டுமே இங்கு எழும் ஒரே கேள்வி.!

மி7 அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது
சியோமி நிறுவனத்தின் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு உறுதி செய்யப்படவில்லை என்கிற போதிலும், நிறுவனத்தின் அடுத்த தலைமை ஸ்மார்ட்போன் ஆன மி7 அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த எம்டபள்யூசி நிகழ்வில் தான் மி5 அறிவிக்கப்பட்டதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
கடந்த ஆண்டு நடந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் எக்ஸ்போவை தவிர்த்த சியோமி நிறுவனம் இந்த ஆண்டு மொத்தமாக சேர்த்து மி 7 எனும் ஒரு பெரிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யுமென எதிர்பார்க்கலாம். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டு மி7 இயக்கப்படலாம்.

கைரேகை ரீடர் உடன் 3டி முக அங்கீகார தொழில்நுட்பம்
சியோமி நிறுவனத்தின் சிஇஓ -ஆன லீ ஜூன் சில வாரங்களுக்கு முன்னர் தான் மி7-ல் ஸ்னாப்டிராகன் 854 சிப்செட்டை உறுதி செய்தார், அந்நாளில் இருந்தே மி7 மீதான எதிர்பார்ப்புகள் கூடியது. குறிப்பாக, ஐபோன் எக்ஸ் போன்ற 3டி முக அங்கீகார தொழில்நுட்பமானது, மி7 ஸ்க்ரீனில் இடம்பெறும் கைரேகை ரீடர் உடன் உட்பொதிக்கப்படும் என்கிற தகவல் ஆர்வத்தை தூண்டும் வண்ணம் உள்ளது.

டிஸ்பிளே
சியோமி மி7 பற்றிய இதர விவரங்களை பொறுத்தமட்டில், இக்கருவி மொத்தம் இரண்டு மாதிரிகளில் அறிமுகப்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. உடன் இந்த ஸ்மார்ட்போனும் அதன் அடிப்படை மாறுபாடு போன்றே ஒரு 5.65 அங்குல டிஸ்பிளே கொண்டதாக இருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

18: 9 திரை விகிதம்
இருப்பினும் இதன் பிளஸ் மாறுபாடு, அதாவது சியோமி மி 7 ப்ளஸ் ஆனது ஒரு 6.01 அங்குல டிஸ்பிளேவை கொண்டு வெளிவரலாம். பிற பிராண்ட்களில் இருந்து வெளியாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இடம்பெறும், 18: 9 திரை விகித பாணியாது வெளியாகும் இரண்டு வகையான மாதிரிகளுமே இடம்பெறும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

20 மெகாபிக்சல் (சோனி ஐஎம்எக்ஸ்350) சென்சார்
இன்னும் சொல்லப்போனால் இந்த 2018-ஆம் ஆண்டில் வெளியாகும் அனைத்து சியோமி ஸ்மார்ட்போன்களுமே 18:9 என்கிற அளவிலான திரை விகிதத்தை தான் கொண்டிருக்கும். சில வதந்திகலின்படி, மி 7 ஸ்மார்ட்போனின் உயர்-இறுதி மாறுபாடானது 6ஜிபி அளவிலான ரேம் கொண்டிருக்கும் மற்றும் 12 மெகாபிக்சல் (சோனி ஐஎம்எக்ஸ்380) சென்சார் மற்றும் ஒரு 20 மெகாபிக்சல் (சோனி ஐஎம்எக்ஸ்350) சென்சார் (மி 6-ல் இடம்பெற்றுள்ளதை போலவே) ஆகிய அம்சங்களை கொண்டிருக்கலாம்.

அதிகாரப்பூர்வமான விவரங்கள்
இன்னும் ஒரு மாத காலமே எம்டபுள்யூசி 2018 நிகழ்விற்கு மீதமுள்ள நிலையில், சியோமி நிறுவனம் அடுத்த சில வாரங்களில் அதன் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய அதிகாரப்பூர்வமான விவரங்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கலாம். மேலும் பல சியோமி மற்றும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வு பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470