Home
Mobile

நம்பர் 1 யாருனு இப்ப தெரியும்: மொத்த போனுக்கும் ஆப்பு வைக்கும் புதிய Xiaomi போன்!

Xiaomi 13 Pro இந்திய BIS சான்றிதழ் தளத்தில் தோன்றி இருக்கிறது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக சியோமி அறிமுகம் செய்யும் எந்த போனும் அந்தளவிற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை என்று தான் கூற வேண்டும். இதை நிவர்த்தி செய்யவே சியோமி இந்த ஸ்மார்ட்போனை இந்திய சந்தைக்கு கொண்டு வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

நம்பர் 1 யாருனு இப்ப தெரியும்: மொத்த போனுக்கும் ஆப்பு வைக்கும் Xiaomi

தனி வாடிக்கையாளர்கள் பட்டாளம்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை ஆக்கிரமித்து வைத்திருக்கும் நிறுவனங்களில் பெரும்பாலானவை வெளிநாட்டு நிறுவனங்கள் தான். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்த பட்டியலில் அதிக இடத்தை கொண்டிருப்பது சீன நிறுவனங்கள் தான். இந்த நிறுவனங்களில் சியோமி மட்டும் இந்தியாவில் தனித்து ஒரு இடம் பிடித்து கொடிக்கட்டி பறந்து வந்தது. சியோமி நிறுவனத்துக்கு என தனி வாடிக்கையாளர்கள் பட்டாளமே இருக்கிறது.

புது ஸ்மார்ட்போனை அறிமுகம்

இந்த நிலையில் சியோமி சமீபகாலமாக தொய்வு நிலையை சந்தித்து வருகிறது. ஆரம்பத்தில் இருந்த அளவிலான வரவேற்பு தற்போது சியோமி போன்களுக்கு இல்லை என்று தான் கூற வேண்டும். இந்த வெற்றிடத்தை பயன்படுத்தும் முயற்சியில் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் முணைப்போடு செயல்பட்டு வருகிறது. இதை அறிந்த சியோமி, வாடிக்கையாளர்களின் மொத்த கவனத்தையும் ஈர்க்கும் வகையில், சியோமி 13 என்ற புது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.

MWC 2023 நிகழ்வு

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சியோமி தனது சியோமி 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்தது. சியோமி 13 சீரிஸ் இல் சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ ஆகிய மாடல்கள் இடம்பெற்றுள்ளது. உலக சந்தையிலும் இதே மாடல்களில் சியோமி 13 சீரிஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் MWC 2023 நிகழ்வில் சியோமி இந்த ஸ்மார்ட்போனை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் இந்தியாவில் அறிமுகம்

சியோமி 13 சீரிஸ் ப்ரோ மாடல் இந்திய BIS சான்றிதழ் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் தாய்லாந்து NBTC சான்றிதழ் இணையதளத்திலும் தோன்றி இருப்பதாக கூறப்படுகிறது.

BIS சான்றிதழ் தளத்தில் தோன்றிய சியோமி 13 ப்ரோ

டிப்ஸ்டர் முகுல் சர்மா மூலம் Xiaomi 13 Pro ஆனது மாடல் எண் Xiaomi 2210132G உடன் இந்திய BIS சான்றிதழ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் NBTC சான்றிதழ் இணையதளத்திலும் தோன்றி இருக்கிறது. ஆனால் அங்கு Xiaomi 13 ஆனது மாடல் எண் 2211133G உடன் டேக் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டு மாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு

இரண்டு ஸ்மார்ட்போன்களும் 5ஜி ஆதரவு போனாக இருக்கும் என்பது NBTC சான்றிதழ் தளத்தின் மூலம் ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுள்ளது. சியோமி 13 சீரிஸ் இல் உள்ள இரண்டு போன்களும் இந்தியாவில் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த வேறு எந்த தகவலும் சான்றிதழ் தளங்களில் கண்டறியப்பட முடியவில்லை என கூறப்படுகிறது.

நம்பர் 1 யாருனு இப்ப தெரியும்: மொத்த போனுக்கும் ஆப்பு வைக்கும் Xiaomi

Xiaomi 13 Pro சிறப்பம்சங்கள்

Xiaomi 13 Pro முன்னதாகவே சீனாவில் அறிமுகமாகி உள்ளது. அதன்படி இதன் அம்சங்களை பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடனான 6.73 இன்ச் QHD+ அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது.

கேமரா அம்சங்கள்

ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன் மூன்று கேமராக்களைக் கொண்டிருக்கிறது. மூன்றும் 50 எம்பி சென்சார் தான். அதாவது இதில் 50MP + 50MP + 50MP என டிரிபிள் ரியர் கேமராக்கள் இருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி ஆதரவுக்கு என 32 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

அதேபோல் இதில் 4820 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இதில் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 ஸ்கின் அவுட் ஆஃப் பாக்ஸ் இல் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Ensure its Number 1 Position Soon: Xiaomi 13 Pro Launching Soon in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X