48 மெகா பிக்சல் கேமராவுடன் அறிமுகம் செய்யப்படும் சியோமி ஸ்மார்ட்போன்.!
சியோமி நிறுவனம் விரைவில் 48 மெகா பிக்சல் உடன் தனது அடுத்த ஸ்மார்ட்போன் மாடலை வெளியிடுமென்று அதிகாரப்பூர்வமாக அதன் சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
சியோமி நிறுவனம் விரைவில் 48 மெகா பிக்சல் உடன் தனது அடுத்த ஸ்மார்ட்போன் மாடலை வெளியிடுமென்று அதிகாரப்பூர்வமாக அதன் சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

சியோமி நிறுவனம் அறிவித்துள்ள இந்த அறிவிப்பினால் மறுபடியும் ஸ்மார்ட்போன் சந்தையில் கேமராகளுக்கான போட்டி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உயர்தர ரெசொலூஷன் கேமரா
நீண்டகாலமாக அணைத்து பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐபோன்கள் 12 மெகா பிக்சல் கொண்ட இமேஜ் சென்சார் கேமராகளை பயன்படுத்திவருகின்றது. அண்மையில் உயர்தர ரெசொலூஷன் கேமரா சேவைகள் ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

புது போட்டி
தற்பொழுது சியோமி அறிவித்துள்ள அறிவிப்பின் படி, நிச்சயம் ஸ்மார்ட்போன்களில் இருக்கும் கேமரா சேவையை மற்ற நிறுவங்களும் பின்பற்றி முறியடிக்கப் பல முயற்சிகளை மேற்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே நிச்சயம் ஸ்மார்ட்போன் சந்தையில் கேமராக்களுக்கென ஒரு புது போட்டி துவங்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹுவாய் மேட் 20 ப்ரோ
ஹுவாய் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஹுவாய் மேட் 20 ப்ரோ மற்றும் ஹுவாய் 20 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடலிலும் 40 மெகா பிக்ஸல் கொண்ட இமேஜ் சென்சார் கேமராகள் வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

48 மெகா பிக்சல் கேமரா
தற்பொழுது சியோமி நிறுவனம் ஹுவாய் நிறுவனத்தின் 40 மெகா பிக்சல் கேமரா சேவைக்கு போட்டியாக அதன் அடுத்த ஸ்மார்ட்போனில் 48 மெகா பிக்சல் கேமராவுடன் வெளியிடப்படுமென்று அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜனவரியில் அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications