வேற லெவல் ஸ்மார்ட்போன்களாக தயாராகும் சியோமி Comet மற்றும் சியோமி Sirius.!
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே இன்னும் அறிவிக்கப்படாத ஸ்னாப்டிராகன் 710 எஸ்ஒசி கொண்டு இயங்கும் என்றும், வெளியான XDA டெவலப்பர்கள் அறிக்கை தெரிவித்துள்ளது.
சமீப காலமாக, ஆண்ட்ராய்டு அடிப்படையிலான அசல் உபகரண உற்பத்தியாளர்கள் (Original equipment manufacturer) க்வால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்ட்ராகன் தொடர் மொபைல் சிஸ்டம் சிப்செட்கள் மீதான முக்கியத்துவத்தையும், ஆர்வத்தையும் காட்டி வருகின்றனர்.
பெரும்பாலான நிறுவனங்களின் ஹை-எண்ட் ஸ்மார்ட்போன்களில் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்டும், மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 400 மற்றும் 600 தொடர் சிப்செட்டும் இடம்பெறுவதை காண முடிகிறது. இந்த ஸ்னாப்டிராகன் பட்டியலின், ஒரு உச்சகட்ட இடத்தை அடையும் நோக்கத்தின் கீழ் சியோமி நிறுவனம் செயல்படுவதை ஒரு சமீபத்திய அறிக்கை வெளிபப்டுத்தி உள்ளது.

வெளியான அறிக்கையின்படி, வரவிருக்கும் ஸ்னாப்டிராகன் 670 ஆனது ஸ்னாப்டிராகன் 710 என்ற பெயரின்கீழ் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. மேலும் அந்த சிப்செட், சியோமி நிறுவனத்தின் வரவிருக்கும் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களில் குறைந்தபட்சம் இரண்டு ஸ்மார்ட்போன்களையாவது சக்தியூட்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அந்த மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள் - சியோமி காமட் மற்றும் சியோமி சிரியஸ் என்றும், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே இன்னும் அறிவிக்கப்படாத ஸ்னாப்டிராகன் 710 எஸ்ஒசி கொண்டு இயங்கும் என்றும், வெளியான XDA டெவலப்பர்கள் அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களின் பெயர்களான 'காமட்' மற்றும் 'சிரியஸ்' என்பது வெறும் குறியீடு பெயர் தான், நிஜமான பெயர் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. சியோமி காமட் ஸ்மார்ட்போனின் இதர எ,அம்சங்களை பொறுத்தவரை, ஓஎல்டி டிஸ்ப்ளே, இரட்டை சிம் ஆதரவு, ஒரு 3100mAh பேட்டரி, ஒரு ஐஆர் பிளாஸ்டர் மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ (பெட்டிக்கு வெளியே), NFC ஆதரவு மற்றும் ஒரு மைக்ரோ எஸ்டி ஸ்லாட் ஆகியவைகளை கொண்டிருக்கும்.

மறுகையில் உள்ள சியோமி சிரியஸ் ஆனது, ஒரு OLED டிஸ்ப்ளே, ஆல்வேஸ் ஆன் அம்சம், இரட்டை சிம் ஆதரவு, ஒரு பெரிய 3120mAh பேட்டரி, கேமரா பயன்பாட்டில் போர்ட்ரெயிட், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஆகியவைகளை கொண்டிருக்கும். இருப்பினும் NFC மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டுகளுக்கான ஸ்லாட் போனரே ஆதரவுகளை கொண்டிருக்காது.


Click it and Unblock the Notifications