Home
Mobile

ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதியுடன் சியோமி CIVI ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?

சியோமி நிறுவனம் சீனாவில் புதிய சியோமி CIVI எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் அசத்தலான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. அதேபோல் சியோமி CIVI ஸ்மார்ட்போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த சாதனத்தின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சியோமி CIVI ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச்

சியோமி CIVI ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் ஃபுல் எச்டி AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 10-பிட் கலர் பேனல், எச்டிஆர்10 பிளஸ் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைஅடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

 CIVI ஸ்மார்ட்போனில் தரமான

இந்த சியோமி CIVI ஸ்மார்ட்போனில் தரமான ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஸ்மார்ட்போனின் பின்புறம்

புதிய சியோமி CIVI ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த

சியோமி CIVI ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

4500எம்ஏஎச் பேட்டரி

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி மற்றும் 55 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜ் செய்ய முடியும். பின்பு இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 டூயல்-பேண்ட் வைஃபை,

5 ஜி, டூயல் சிம், 4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.2, என்எப்சி, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், பீடூ, க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சியோமி CIVI ஸ்மார்ட்போன்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி CIVI ஸ்மார்ட்போனின் விலை RMB 2,599 (இந்திய மதிப்பில் ரூ.29,630).
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சியோமி CIVI ஸ்மார்ட்போனின் விலை RMB 3,199 (இந்திய மதிப்பில் ரூ.36,480).

அதேபோல் சியோமி நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம்செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

Best Mobiles in India

English summary
Xiaomi CIVI Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X