Home
Mobile

செஞ்சி விட்ட சியோமி.. 200MP கேமரா.. OLED டிஸ்பிளே.. IP69 ரேட்டிங்.. புதுசா 2 மாடல்கள்.. விலை எப்படி?

சியோமி நிறுவனத்தின் சியோமி சிவி 6 (Xiaomi Civi 6) மற்றும் சியோமி சிவி 6 ப்ரோ (Xiaomi Civi 6 Pro) ஸ்மார்ட்போன்களின் முக்கிய பீச்சர்கள் கசிந்துள்ளன. பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படியான சிப்செட்களுடன் வெளியாக இருக்கின்றன. விலை எப்படி இருக்கும்?

சியோமி சிவி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, சியோமி சிவி 6 சீரிஸ் மாடல்களுக்கு எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்த நேரத்தில் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக முக்கிய பீச்சர்கள் கசிந்துள்ளன. இதில் சியோமி சிவி 6 ப்ரோ பட்டையை கிளப்பும் பர்ஃபாமென்ஸ் கொடுக்க இருப்பது தெரிகிறது.

செஞ்சி விட்ட சியோமி.. 200MP கேமரா.. OLED டிஸ்பிளே.. IP69 ரேட்டிங்!

சியோமி சிவி 6 முக்கிய அம்சங்கள்: 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.59 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொடுக்க இருக்கிறது. 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா மற்றும் 5X ஆப்டிகல் ஜூம் கிடைக்க உள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 8500 (MediaTek Dimensity 8500) சிப்செட்டுடன் வெளியாக இருக்கிறது. ஐபி69 ரேட்டிங் கொடுக்க இருக்கிறது.

சியோமி சிவி 6 ப்ரோ முக்கிய அம்சங்கள்: 200 மெகா பிக்சல் பிரைமரி கேமரா கிடைக்க இருக்கிறது. 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா மற்றும் அல்ட்ரா வைடு கேமரா கிடைக்க இருக்கிறது. இதிலும், 5X ஜூம் கிடைக்க இருக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட்டை கொடுக்க இருக்கிறது. 6.83 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே உள்ளது.

மேலும், 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஐபி69 ரேட்டிங்குடன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே மார்கெட்டில் கசிந்துள்ளன. இருப்பினும், முன்னதாக வெளியான சியோமி சிவி 5 ப்ரோ விலையை வைத்து இந்த ஸ்மார்ட்போனின் பட்ஜெட்டை தெரிந்து கொள்ளலாம்.

சியோமி சிவி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.36,000 பட்ஜெட்டில் இருந்தது. ஆகவே, சியோமி சிவி 6 ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.49,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். இது ஆரம்ப விலையாக இருக்கும். அறிமுக சலுகையில் அதைவிட கம்மியாகவும் இருக்கலாம். சியோமி சிவி 5 ப்ரோ பீச்சர்கள் எப்படி?

சியோமி சிவி 5 ப்ரோ முக்கிய பீச்சர்கள்: ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் சிப்செட் கிடைக்கிறது. 6000mAh பேட்டரி மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது. ஆகவே, சியோமி சிவி 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் இதைவிட அதிக பேட்டரி கேபாசிட்டி எதிர்பார்க்கலாம். 2750 x 1236 பிக்சல்களுடன் 6.55 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே உள்ளது.

1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பும் கிடைக்கிறது. ஆகவே, சிவி 6 ப்ரோ மாடலிலும் டிஸ்பிளே பாதுகாப்பு இருக்கும். டால்பி விஷன், எச்டிஆர் 10பிளஸ் போன்ற பிரீமியம் டிஸ்பிளே பீச்சர்களும் கிடைக்கின்றன.

எப்/1.63 அபெர்சர், லைட் ப்யூஷன் 800 சென்சார், ஹைப்பர் ஓஎஸ், லெய்கா சம்மிலக்ஸ் லென்ஸ் உடன் 50 எம்பி பிரைமரி கேமரா உள்ளது. 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி 60எம்எம் பெரிஸ்கோப் டெலிபோட்டோ உள்ளது. 10செ.மீ. மேக்ரோ கிடைக்கிறது. இதே கேமரா சிஸ்டமானது, சியோமி சிவி 6 ப்ரோவில் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Xiaomi Civi 6 Xiaomi Civi 6 Pro With MediaTek Dimensity Chip Launch Soon Specifications Leaked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X